செய்திகள் :

திருச்சி: "திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்!" - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

post image

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி விவசாயிகளுக்கு எதிராகவேதான் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளது. தி.மு.க, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. வருகிற தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களிப்பதை விரும்பவில்லை. தி.மு.க-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம். 38 கோரிக்கைகள் எந்த அரசியல் கட்சி ஏற்றுக் கொள்கிறதோ, அது குறித்து அலசி ஆராய்ந்த பின்பு முடிவெடுக்கப்படும். வரும் மார்ச் 31- ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துவது என முடிவெடுத்துள்ளோம்.

pr pandiyan

அந்த மாநாட்டில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தி.மு.க மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். விவசாயிகளுக்கு தி.மு.க அரசு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. தி.மு.க அரசு விவசாய விரோத சட்டம் கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு உள்ளது. எனவே, வரும் சட்ட மன்ற தேர்தலில் விவசாயிகள் தி.மு.க-விற்கு வாக்களிக்க மாட்டோம். தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். எந்த கட்சி விவசாயிகளுக்கு நம்பிக்கையாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அந்த கட்சிக்கு ஆதரவு தர தயங்க மாட்டோம்" என்றார்.

இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்?

புதுச்சேரி, தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங... மேலும் பார்க்க

``கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" - அண்ணாமலை அதிரடி

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமிக்கு நடத்த கொடூரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் அளித்த... மேலும் பார்க்க

'ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?'- அன்புமணி கேள்வி

'படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்கள் தேவா, ஜீவாவை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வ... மேலும் பார்க்க

சுயேட்சையிடம் டெபாசிட் இழந்த திமுக; நோட்டாவுக்கு பின்னால் பாஜக; அதிமுக அவுட்! | RK நகர் ஆடுபுலி 09

அரசியல் ஆடுபுலி 09மறைந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக இருந்த வி.கே.சசிகலா 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்... மேலும் பார்க்க

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல... மேலும் பார்க்க

விஜய்யை கூட்டணிக்குள் இணைக்க பாஜக முயற்சியா? - நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைக்க பாஜக முயல்வதாக கடந்த ஒரு வாரமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் ந... மேலும் பார்க்க