செய்திகள் :

Jailer 2 Exclusive: 'ஜெயிலர் 2'வில் ஷாருக்கான் கேமியோ; சண்டிகரில் படமாகும் காட்சிகள்!

post image

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் ரஜினி காந்த் படம் ரிலீஸாகும்.

இப்போது, 75 வயதில் 'ஜெயிலர் -2', அடுத்து ஏப்ரல் மாதத்தில் சிபி சக்ரவர்த்தி டைரக்ஷனில் நடிக்கப் போகிறார். இதற்கிடையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி & கமல் நடிக்கும் படத்தின் ப்ரமோ வெளியீடு என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பம்பரமாய் சுழன்று நடிக்கிறார் ரஜினி காந்த்.

JAILER 2
JAILER 2

இந்தியாவிலேயே விதவிதமான கார்களை நசுக்கி, உடைக்கும் பெரிய மிஷன்கள் கொண்ட பிரமாண்ட பேக்டரி சண்டிகரில் இருக்கிறது.

அங்கேதான் 'ஜெயிலர் 2' படத்துக்காக ரஜினி & ஷாருக்கான் கலந்து கொள்ளும் பிரமிப்பான காட்சிகளைப் படம் பிடிக்கிறார், நெல்சன். முதன் முதலாக ரஜினி & ஷாருக்கான் இணைந்து நடிக்கும் காட்சிகள் 'ஜெயிலர் 2' படத்தில் பெரிதாகப் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாகச் செதுக்கி வருகிறார் டைரக்டர் என்று சிலாகித்துச் சொல்கிறார்கள்.

கமலை விட ரஜினி வயதில் மூத்தவர் என்றாலும் சினிமாவில் சீனியர் கமல் என்பதால் எப்போதும் அவருக்குத் தனி மரியாதை கொடுப்பார் ரஜினி.

தமிழ் சினிமா நிகழ்ச்சிகள் நடக்கும் எல்லா மேடைகளிலும் கமலை, கலையுலக அண்ணா என்றே மரியாதை கொடுத்து அழைப்பது ரஜினியின் வழக்கம்.

முதலில் RK & KH என்று டைட்டில் தயாரித்து ரஜினியிடம் காட்டி இருக்கிறார், நெல்சன். அதைப் பார்த்த ரஜினி பயங்கர டென்ஷனாகி விட்டாராம், பிறகு தன் கையாலேயே KH & RK என்று டைட்டில் மாற்றி எழுதிக் கொடுத்தார் என்று நெகிழ்ந்து போய் சொல்கிறார்கள். ரஜினி & கமல் இணையும் படத்துக்கு தென்னிந்தியாவில் மட்டுமல்ல, ஆல் இந்தியாவிலும் அமோக எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

KH x RK
KH x RK

ஏற்கெனவே மம்முட்டியும் ரஜினியோடு நடிக்க விரும்புகிறாராம். அடுத்து ராணுவ வீரன், மாப்பிள்ளை படத்துக்குப் பிறகு ரஜினியோடு நடிக்க சிரஞ்சீவி விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம்.

பொதுவாக ரஜினி ஒரு படத்தில் கமிட்டாகி முழுமையாக நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் கவனம் செலுத்துவார். ரஜினியின் சினிமா கேரியரில் முதன் முறையாக ஒரே நேரத்தில் மூன்று படங்களில் கமிட்டாகி இருக்கிறார் என்று ஆச்சர்யமாய் அண்ணாந்து பார்க்கிறது, கோடம்பாக்கம்.

Sai Abhyankkar: "ரீல்ஸ்களில் வரவேண்டும் என்பதற்காக பாடல்கள் செய்யமாட்டேன்" - சாய் அபயங்கர்

'கருப்பு', அட்லீ - அல்லு அர்ஜூன் திரைப்படம், தனுஷின் 55-வது படம் எனப் பிரமாண்ட லைன்-அப்களை கையில் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். சுயாதீனப் பாடல்கள் மூலம் மியூசிக் கரியரைத் தொடங்கியவர் இ... மேலும் பார்க்க

"நான் லைம்லைட்டுல இருந்து கொஞ்சம் மறைஞ்சுட்டேன்" - 'ஆரண்ய காண்டம்' கொடுக்காப்புளி பேட்டி

தியாகராஜன் குமாரராஜாவின் 'ஆரண்ய காண்டம்' இந்த வாரம் ரீரிலீஸ் ஆகியிருக்கிறது. முதல் ரிலீஸில் பெரியளவில் கொண்டாடப்படாத இத்திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடினார்... மேலும் பார்க்க

அடியே... (பேச்சுலர்) : "இந்தப் பாடலுக்கு பெண் ரசிகர்கள்தான் அதிகம்!" - ஜிகேபி | வரித்துணையே 9

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

" 'வீரம்' படப்பிடிப்பின்போது எனக்கு இட்லி செய்து கொடுத்தார்"- அஜித் குறித்து பகிர்ந்த தமன்னா

தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் குறித்து தமன்னா பேசிவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. மேடையில் பேசிய தமன்னா," தற்போது... மேலும் பார்க்க

"தமிழ் சினிமாவில தான் இது சாத்தியம்; வேறு மொழியில் ஓடியிருக்குமான்னு.!" - 'சிறை' பற்றி வெற்றிமாறன்

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில் 'சிறை' படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம... மேலும் பார்க்க

சிறை: "காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன் அப்பா, தாத்தா பெயரை.!"- விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். '7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப் படத்தில்... மேலும் பார்க்க