செய்திகள் :

Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' - சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி

post image

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சி.பி.எம் கட்சி வலுவாக உள்ளது. கண்ணுர் மாவட்டத்தில் உள்ள தளிப்பறம்பு சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக உள்ளார் எம்.வி.கோவிந்தன்.

இதற்கு முன்பு இரண்டுமுறை அந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். தற்போது சி.பி.எம் மாநிலச் செயலாளராக இருக்கும் எம்.வி.கோவிந்தன் இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துவிட்டார்.

அதே சமயம் எம்.வி.கோவிந்தன் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தளிப்பறம்பு தொகுதியில் அவரது மனைவி பி.கே.ஷியாமளா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது கட்சி சீனியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்பது ஆண்டுகள் மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டக் குழு உறுப்பினராகவும் 60 ஆண்டுகள் சி.பி.எம் கட்சியில் செயல்பட்ட டி.கே.கோவிந்தன் கட்சியில் இருந்து வெளியேறி, தளிப்பறம்பு தொகுதியில் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தனின் மனைவி பி.கே.ஷியாமளாவுக்கு எதிராகப் போட்டியிடுகிறார்.

சுயேச்சையாகப் போட்டியிடுவதோடு காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் தன்னை ஆதரித்தால் அதை ஏற்றுக்கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

தளிப்பறம்பு தொகுதி சி.பி.எம் வேட்பாளர் பி.கே.சியாமளா
தளிப்பறம்பு தொகுதி சி.பி.எம் வேட்பாளர் பி.கே.சியாமளா

இதுகுறித்து டி.கே.கோவிந்தன் கூறுகையில், "கட்சியின் விதிப்படி இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மூன்றாவது முறை போட்டியிடக்கூடாது. ஆனால், எம்.வி.கோவிந்தன் நான்காவதாக எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்று நினைத்தார். அவர் இப்போது மாநிலச் செயலாளராக இருப்பதால் அது நடக்காது.

அதனால், அவருடைய மனைவியை சட்டமன்ற உறுப்பினராக்க முயற்சி நடக்கிறது. இதை மாவட்டக் குழுக் கூட்டத்திலேயே நான் எதிர்த்தேன். எம்.வி.கோவிந்தன் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அந்த இருக்கையில் நான்காவது முறையாக மனைவியை அமர வைக்க முயல்வது எந்தவிதத்தில் நியாயம் எனக் கேட்டதுடன் தேர்தல் பணி செய்ய முடியாது என வெளிப்படையாகத் தெரிவித்தேன்.

டி.கே.கோவிந்தன்
டி.கே.கோவிந்தன்

மாவட்டக் குழு கூட்டத்திலும், மண்டலக் குழு கூட்டத்திலும் மூன்று பேரைத் தவிர மற்ற அனைவரும் பி.கே.சியாமளாவைப் போட்டியிட வைக்கும் முடிவைக் கடுமையாக எதிர்த்தனர். அந்தக் கூட்டத்தில் எம்.வி.கோவிந்தனும் இருந்தார். மனைவியை வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று அவரிடம் நேரடியாகவே கோரிக்கை வைக்கப்பட்டது. 

பி.கே.சியாமளாவிற்குப் பதிலாக என்.சுகன்யா உள்ளிட்ட பலருடைய பெயரையும் மாவட்டச் செயற்குழு பரிசீலித்து. ஆனால், அவற்றை மாநிலச் செயற்குழுவிற்கு அனுப்பவில்லை. இறுதியில் பி.கே.சியாமளாவின் பெயரை மட்டும் மேல்மட்டக் குழுவிற்கு அனுப்பி அதை அங்கீகரிக்க வைத்துள்ளனர். எனவே கட்சியில் இருந்து விலகி தளிப்பறம்பு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன்" என்றார்.

சி.பி.எம் கட்சியில் 63 ஆண்டுகளாகச் செயல்பட்ட ஜி.சுதாகரன் அம்பலப்புழா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவது கட்சி பலமாக உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுபோன்று தளிப்பறம்பு தொகுதிதில் 60 ஆண்டுகளாகச் செயல்பட்ட டி.கே.கோவிந்தன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளதால் சி.பி.எம் கட்சியின் எஃக்கு கோட்டையான கண்ணூர் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vijay : 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்!' - விஜய்யின் கட்டளையும் வியூகப்புள்ளியின் லாஜிக்கும்!

தவெக - என்.டி.ஏவுடன் கூட்டணி பேசுவதாக செய்தி வெளியாகி அரசியல் வட்டாரமே பரபரப்பானது. இந்நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட விஜய், 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்.... மேலும் பார்க்க

"தமிழகத்தின் தொன்மைக்குக் கிடைத்த வெற்றி" - 11ம் கட்ட கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி உள்ளிட்ட எட்டு முக்கியமான இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒருவர் பணம் ... மேலும் பார்க்க

``ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!” - அடித்து ஆடும் பன்னீர்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் நடந்தது. இதில், அமைச்சர் கீதா ஜீவன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்... மேலும் பார்க்க

Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனா கருத்... மேலும் பார்க்க

"நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள்" - திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தொகுதி வார... மேலும் பார்க்க