செய்திகள் :

``ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!” - அடித்து ஆடும் பன்னீர்!

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் நடந்தது. இதில், அமைச்சர் கீதா ஜீவன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ``அண்ணா ஆரம்பித்த தி.மு.க-வில் என்னை இணைத்த முதல்வருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தி.மு.க கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே போகவில்லை. நிரந்தரக் கூட்டணியாகத்தான் உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

புதிதாக தே.மு.திக இணைந்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க., இருந்தபோது ராஜ்யசபா உறுப்பினர் சீட் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை துச்சம் என தூக்கி எறிந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஒப்பந்தமே போடாமல் தி.மு.க., தே.மு.தி.கவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கியிருக்கிறது. லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தினார்  எடப்பாடி பழனிசாமி. தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தினார்.

இப்படி ஜெயலலிதா மக்கள் நலனுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்தினார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகிய நால்வருமே மக்களால் ஓட்டு போட்டு முதல்வர் ஆனவர்கள்.

ஆனால், நான் உட்பட மற்றவர்கள் அப்பாயிண்மென்ட். எடப்பாடி பழனிசாமியைப் பற்றி நான் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் எனக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றுக் கொண்டு, தற்போது சசிகலாவைப் பார்த்து ஏதோ குறைக்கிறது என்கிறார். அப்படிச் சொல்லலாமா? உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் மண்வெட்டியை எடுத்து அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். அ.தி.மு.கவை அழித்த வரலாற்றுப் பெருமை இவர்களையே சாரும். என்னைப் பற்றியோ நான் கடந்து வந்த அரசியல் பாதையைப் பற்றியோ பேச அவர்களுக்கு அருகதை இல்லை” என்றார்.

`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!

திமுக - சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. திமுகவின் தொகுதிப் பங்கீடு ... மேலும் பார்க்க

Vijay : 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்!' - விஜய்யின் கட்டளையும் வியூகப்புள்ளியின் லாஜிக்கும்!

தவெக - என்.டி.ஏவுடன் கூட்டணி பேசுவதாக செய்தி வெளியாகி அரசியல் வட்டாரமே பரபரப்பானது. இந்நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட விஜய், 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்.... மேலும் பார்க்க

"தமிழகத்தின் தொன்மைக்குக் கிடைத்த வெற்றி" - 11ம் கட்ட கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி உள்ளிட்ட எட்டு முக்கியமான இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

வரும் ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒருவர் பணம் ... மேலும் பார்க்க

Rajinikanth: 'காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்' - ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது பொதுவெளியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ஆதவ் அர்ஜுனா கருத்... மேலும் பார்க்க

"நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள்" - திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தொகுதி வார... மேலும் பார்க்க