செய்திகள் :

Vijay : 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்!' - விஜய்யின் கட்டளையும் வியூகப்புள்ளியின் லாஜிக்கும்!

post image

தவெக - என்.டி.ஏவுடன் கூட்டணி பேசுவதாக செய்தி வெளியாகி அரசியல் வட்டாரமே பரபரப்பானது. இந்நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட விஜய், 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம். பார்த்துக்கலாம்...' கறாராக கூறிவிட்டதாக உற்சாகமாக தகவல் சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

TVK Vijay | விஜய்
TVK Vijay | விஜய்

தவெகவுக்கான வார் ரூமை ஆதவ் அர்ஜூனா தேனாம்பேட்டையில் ஒரு பெரிய வளாகத்தின் 7 வது மாடியில் நடத்தி வருகிறார். விஜய்யும் அவ்வபோது இந்த வார் ரூமுக்கு வந்து ஆலோசனைகளை நடத்திவிட்டு பணியாளர்களை சந்தித்து உற்சாகப்படுத்திவிட்டு செல்வார்.

நேற்றும் விஜய் இந்த தேனாம்பேட்டை அலுவலகத்துக்கு வந்திருந்தார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஸ் என தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக விஜய் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த மீட்டிங்கில்தான் 'என்ன ஆனாலும் நாம தனியாதான் போறோம். தனியாதான் எலெக்சனை சந்திக்கிறோம்' என விஜய் கறாராக கூறியதாக கிசுகிசுக்கின்றனர் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

TVK Vijay - தவெக விஜய்
TVK Vijay - தவெக விஜய்

முதற்கட்டமாக வேட்பாளர்களை இறுதி செய்த விஜய், அடுத்தக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் தயார் செய்து கேட்டிருக்கிறார். அந்த வேட்பாளர்களையும் இந்த வாரத்துக்குள்ளேயே சந்திக்கவிருக்கிறார் என்கிறார்கள்.

`போதைப் பொருள்கள் விற்கும் சந்தையாக தமிழ்நாட்டை திமுக மாற்றி விட்டது' - டி.டி.வி.தினகரன் தாக்கு!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள் இணைந்து, தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களைத் தடுக்க தவறியதாக... திமுக அரசைக் கண்டித்து ஆ... மேலும் பார்க்க

அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் நூலிழையில் தப்பிய மொஜ்தபா; `அன்று' நடந்தது என்ன? - வெளியான தகவல்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படை கடந்த மாதம் 28ம் தேதி காலை நேரத்தில் ஈரானில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அலிகமேனி மற்றும் அவரது குடும்பத்தில் முக்கிய தலைவர்கள் உயிரிழந்துவிட்டனர். அ... மேலும் பார்க்க

நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் - கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் - ஆற்றங்கரை பள்ளிவாசல் சாலையில் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது... மேலும் பார்க்க

``எனக்கு `அந்த' நடிகை வேண்டும் எனக் கேட்டால்.!" - சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு

விழுப்புரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்து சி.வி ... மேலும் பார்க்க

`தாமரை மலர்ந்துவிட்டது… உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை!’ – முதல்வர் ரங்கசாமியை ஓரம் கட்டும் பாஜக

`லாட்டரி சார்லஸ் மார்ட்டின் வேண்டாம்’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச... மேலும் பார்க்க

`இரவுக்குள் ஒரு முடிவு; அதிக தொகுதிகள் கிடைக்கவில்லையென்றால்.!' - அறிவாலயத்தில் பெ.சண்முகம் கறார்!

திமுக - சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடிக்கும் நிலையில், இன்று அறிவாலயத்தில் இருதரப்புக்கும் இடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. திமுகவின் தொகுதிப் பங்கீடு ... மேலும் பார்க்க