செய்திகள் :

குஜராத்: '14 வருட உறவு...' - வளர்ப்பு நாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கைதிக்கு ஜாமின்; பின்னணி என்ன?

post image

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சுக்ராம் என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாய் அவருடன் கடந்த 14 ஆண்டுகளாக இருந்தது. அதன் மீது அதிக அன்பு வைத்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். சுக்ராம் தனது மனைவியின் ஆயுள் காப்பீட்டுத் தொகையான ரூ.17 லட்சத்தை அவரது கையெழுத்தைப் போலியாகப் போட்டு மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், கடந்த மாதம் சூரத் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்தத் தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவியின் தரப்பில் கணவர் மீது துன்புறுத்தல் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. திடீரென சுக்ராமுடன் கடந்த 14 ஆண்டுகளாக இருந்த அவரது வளர்ப்பு நாய் இறந்து போனது.

இதையடுத்து அதன் இறுதிச்சடங்குகளைச் செய்ய தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சுக்ராம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

குஜராத் உயர் நீதிமன்றம்
குஜராத் உயர் நீதிமன்றம்

இம்மனுவை அவசர மனுவாக எடுத்துக்கொண்டு விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், சுக்ராமைச் சில மணிநேரம் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்குச் செல்ல அனுமதி அளித்தது.

நீதிபதி தேசாய் தனது தீர்ப்பில், சுக்ராமை போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். மேலும் போலீசார் சாதாரண உடையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதோடு போலீஸ் பாதுகாப்புக்காக ஏற்படும் செலவை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும், இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக சிறைக்கு அழைத்து வர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுக்ராம் சார்பாக கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர், நாய் சுமார் 14 ஆண்டுகளாக என் மனுதாரருடன் இருந்தார். செல்லப்பிராணியிடம் அவர் மிகவும் பற்று கொண்டு இருந்தார். எனவே அதன் இறுதிச்சடங்குகளைச் செய்ய வீட்டிற்குச் செல்ல அவர் விரும்புகிறார்.

10 ஆண்டுக்கும் மேலாக விலங்குடன் அவர் பகிர்ந்து கொண்ட உணர்ச்சிப் பிணைப்பைக் காரணம் காட்டி, மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுவிக்கவேண்டும்'' என்று கோரி இருந்தார்.

"நிறைய பேர் ரீலிஸ் போடுறாங்க, ஏன் உங்களை கூப்பிட்டேன் தெரியுமா?- சிறுவர்களை பாராட்டிய ஸ்டாலின்

'படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க' எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடும் சிறுவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்... மேலும் பார்க்க

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சீரற்ற இதயத் துடிப்பு! - முதியவரின் உயிரை மீட்ட சிம்ஸ் மருத்துவமனை

தொடர்ச்சியான சீரற்ற இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்த, ஐந்து நாட்களில் 250-க்கும் மேற்பட்ட முறை 'டிஃபிபிரிலேட்டர்' மின் அதிர்ச்சிகள் இந்நோயாளிக்கு தேவைப்பட்டன.சமீபத்தில் அதிக ஆபத்தான இதயநாள பைபாஸ் சிகிச்... மேலும் பார்க்க

பன்மொழி மெய்நிகர் விற்பனை AI உதவியாளர் - அறிமுகம் செய்த DRA ஹோம்ஸ்!

சமீபத்தில் முடிவடைந்த CREDAI சென்னை ஃபேர்ப்ரோ கண்காட்சியில், நகரின் முதல் பன்மொழி மெய்நிகர் விற்பனை AI உதவியாளரை DRA ஹோம்ஸ் அறிமுகப்படுத்தியதன் மூலம், சென்னையின் ரியல் எஸ்டேட் துறை ஒரு குறிப்பிடத்தக்க... மேலும் பார்க்க

ஸ்கூட்டர் டிக்கிக்குள் பச்சிளம் குழந்தை - பேரதிர்ச்சியூட்டும் தாயின் செயல்.. கொதிக்கும் இணையவாசிகள்!

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம், ஒட்டுமொத்த இணையதளத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தாய் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ஸ்கூட்டரின் இருக்கைக்... மேலும் பார்க்க

ரத்தன் டாடா வாழ்ந்த வீடு; ரூ.17.6 லட்சம் வாடகைக்கு விட்ட டாடா நிறுவனம் - நோயல் டாடா குடியேற முடிவு?

தொழிலதிபர் ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு தென்மும்பையில் 3 மாடிகள் கொண்ட பக்தவார் என்ற கட்டடத்தில் வசித்து வந்தார். இக்கட்டடம் மும்பை கொலாபா பகுதியில் இருக்கிறது. 1... மேலும் பார்க்க

Elon Musk house: 400 சதுர அடி வீடுதான்; தாய் தங்குவதற்குகூட இடமில்லை; வியக்கவைக்கும் மஸ்க்கின் எளிமை

உலகின் நம்பர் 1 பணக்காரர் என்றால், கோல்டன் கேட்கள், டஜன் கணக்கான படுக்கையறைகள் மற்றும் பிரமாண்ட நீச்சல் குளங்கள் கொண்ட அரண்மனையில்தான் வாழ்வர் என்று நாம் நினைப்போம். ஆனால், எலான் மஸ்க் அனைத்தையும் தலை... மேலும் பார்க்க