செய்திகள் :

Aamir Khan: 'ஆமிர் பாய்க்கு...' - 61வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடிய ஆமீர் கான்!

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நேற்று 61வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து நேற்று மாலை ஆமீர் கான் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்தக் கொண்டாட்டத்தில் ஆமிர் கானின் தற்போதைய காதலி கௌரி ஸ்ப்ராட், அவரது முதல் மனைவி ரீனா தத்தா, அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவ் மற்றும் அவரது பிள்ளைகள் ஜுனைத் கான், இரா கான் மற்றும் ஆசாத் ராவ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் இப்பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட காணொலி ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இர்ஃபான் பதான் பதிவிட்ட காணொலியில், ஆமிர் கான் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதையும், அங்கு கூடியிருந்தவர்கள் அவரை உற்சாகப்படுத்துவதையும் காணலாம்.

பின்னர் ஆமிர் கான் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு முதல் கேக் துண்டுகளை ஊட்டினார். முதல் துண்டை தனது மகன் ஆசாத்துக்கும், அதைத் தொடர்ந்து அவரது மகள் இராவுக்கும், பின்னர் கௌரி ஸ்ப்ராட்டுக்கும் ஊட்டுகிறார்.

காணொலியைப் பகிர்ந்து கொண்ட இர்ஃபான் பதான், மனநலத் துறையில் இரா கானின் பணியைப் பாராட்டி எழுதி இருக்கிறார்.

அதில், “ஆமிர் பாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஈரா கான் அகட்சு அறக்கட்டளை மூலம் மனநலம் குறித்த விழிப்புணர்வையும் ஆதரவையும் பரப்பி, மேலும் பல பயனுள்ள பணிகளைச் செய்வதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் விழாவில் நடிகர் விக்கி கெளஷல், நடிகர் ரிதேஷ் தேஷ்முக், அவரது மனைவி ஜெனிலியா, தயாரிப்பாளர் ரிதேஷ் சித்வானி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பிறந்த நாளையொட்டி ஆமிர் கானும் கௌரி ஸ்ப்ராட்டும் ஒன்றாக வெளியே வந்தபோது புகைப்படக் கலைஞர்கள் அவர்களை போஸ் கொடுக்கச் சொன்னபோது, ​​இருவரும் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்காகச் சிறிது நேரம் நிற்கிறார்கள்.

இம்முறை பிறந்தநாளை ஆமீர்கான் எளிமையாகக் கொண்டாடியதால் சல்மான் கான், ஷாருக்கான் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை. தற்போது ஆமீர் கான் தனது மகன் ஜுனைத் கான் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தீன் படத்தை மே ஒன்றாம் தேதி திரைக்குக் கொண்டு வருவதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

"இது 'லவ் ஜிகாத்' திருமணம் கிடையாது!"- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கும்பமேளா வைரல் பெண் மோனலிசா

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது சிரிப்பாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி ... மேலும் பார்க்க

Dhurandhar 2: "தென்னிந்திய ஆக்ஷன் திரைப்படங்கள் இன்னும் பழைய பாணியில்.!" - ராம் கோபால் வர்மா

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' (Dhurandhar 2: The Revenge) திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து, தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தை மாற்றியம... மேலும் பார்க்க

"அவர் தாய் என்பதால் அது தேவை" - தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர பணி இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இக்கோரிக்கையால் அவர் Spirit மற்றும் Kalki 2898 ADபோன்ற சில படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுக... மேலும் பார்க்க

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள ஜல்சா என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இந்தப் பங்களா அமிதாப் பச்சனுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புடையது. அமிதாப் பச்சனைப் பார்க்க ஒவ... மேலும் பார்க்க

"பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன்; அதனால் தான்..!"- பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க... மேலும் பார்க்க

``'கிங்' பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல; பொறுப்பு" - ஷாருக்கான்

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்' கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹா... மேலும் பார்க்க