செய்திகள் :

"அவர் தாய் என்பதால் அது தேவை" - தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு

post image

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர பணி இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இக்கோரிக்கையால் அவர் Spirit மற்றும் Kalki 2898 AD போன்ற சில படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி இருந்தும் தனது கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார்.

தீபிகா படுகோனோ தாயான பிறகு இக்கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இவ்விவகாரத்தில் தீபிகா படுகோனேவிற்கு பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஆதரவு தெரிவித்துள்ளார்.

அனன்யா பாண்டே, கரீனா கபூர் கான் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் இணைந்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது திரைத்துறையில் நிலவும் வேலை நேர விவாதங்கள் குறித்து அனன்யா கூறுகையில், தீபிகா படுகோனே தாயாவதற்கு முன்பு அவருடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.

அனன்யா கூறுகையில், "தீபிகா தாயாவதற்கு முன்பு நான் அவருடன் பணியாற்றியுள்ளேன். அப்போது அவரிடம் இது போன்று 8 மணி நேர வேலை வேண்டும் என்று கோரும் பழக்கம் எதுவும் இருந்ததில்லை. அவர் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்.

கணவருடன் தீபிகா படுகோனே
கணவருடன் தீபிகா படுகோனே

எதற்கும் புகார் அளிக்கவில்லை, எதையும் பிரத்யேகமாகக் கேட்கவும் இல்லை. இப்போது அவர் ஒரு தாய் என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் குழந்தையுடன் இருக்க வேண்டியது அவரது தற்போதைய தேவை'' என்றார்.

மேலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான கரீனா கபூரைப் புகழ்ந்து பேசிய அனன்யா, "அவருக்குப் பின் வரும் நடிகைகளுக்காக அவர் விதிகளை மாற்றியமைத்ததார். கரீனா அதைச் செய்ததன் மூலம் அவருக்குப் பின் வரும் அனைத்துப் பெண்களுக்கும் அவர் ஒரு புதிய பாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். எனவே, உங்கள் தயாரிப்பாளருடன் பணி நேரம் குறித்துப் பேசுவது தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.

இது தயாரிப்பாளரிடம் தனிப்பட்ட முறையில் பேசி சரிசெய்யப்பட வேண்டிய விஷயம். இவ்வளவுதான் செய்வோம், இவ்வளவுதான் செய்ய வேண்டும் என்று எந்தக் கடுமையான விதியும் இல்லை. இதைப் பற்றிப் பேச அனைவருக்கும் உரிமை உண்டு" என்றார்.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பேசுகையில், "மலையாளத் திரைத்துறையில் பெரும்பாலும் வேலை நேரம் 16 மணி நேரம் வரை நீடிக்கும். படப்பிடிப்பு அட்டவணைகள் வழக்கமாக அதிகாலை 6 மணிக்குத் தொடங்கி, இரவு 9.30 வரை நீடிக்கும்" என்று அவர் விளக்கினார்.

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள ஜல்சா என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இந்தப் பங்களா அமிதாப் பச்சனுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புடையது. அமிதாப் பச்சனைப் பார்க்க ஒவ... மேலும் பார்க்க

"பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன்; அதனால் தான்..!"- பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க... மேலும் பார்க்க

``'கிங்' பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல; பொறுப்பு" - ஷாருக்கான்

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்' கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹா... மேலும் பார்க்க

நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

நடிகர் சல்மான் கான் தந்தையும், பாலிவுட் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் நேற்று காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையை சோதித்த டாக்ட... மேலும் பார்க்க

Taapsee Pannu: `மோடி தான் பிடித்த அரசியல் தலைவர்; ஏனென்றால்...' - வைரலாகும் டாப்ஸி பண்ணுவின் வீடியோ

பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அஸி' (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொல... மேலும் பார்க்க

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காதலர் தினப் பரிசு!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிட... மேலும் பார்க்க