செய்திகள் :

முஸ்தபா முஸ்தபா விமர்சனம்: டிரெண்டில் இருக்கப் போராடும் அவுட்டேட்டட் காமெடி படம்!

post image

கார்த்திக் (சதீஷ்) ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர். திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருக்கும்போது, அவரது அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் பரவத் தொடங்குகிறது.

இதனால் திருமணமே நின்றுவிடக்கூடிய சூழலில் நண்பன் வாசுவுடன் (சுரேஷ் ரவி) அந்த வீடியோவை நீக்கும் முயற்சியில் இறங்குகிறார் கார்த்திக். இந்த முயற்சி எப்படியெல்லாம் குளறுபடியாகிறது என்பதுதான் 'முஸ்தபா முஸ்தபா' கதை.

Mustafa Mustafa Review | முஸ்தபா முஸ்தபா விமர்சனம்
Mustafa Mustafa Review | முஸ்தபா முஸ்தபா விமர்சனம்

இது 'மீக்கு மாத்ரமே செப்தா' (Meeku Maathrame Cheptha) என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்!

படம் முழுக்க சதீஷ், சுரேஷ் ரவி இருவரும் வருகிறார்கள். பாதி வழியில் கருணாகரனும் சேர்ந்துகொள்கிறார். ஆனால், காமெடி மட்டும் டேக் ஆஃப் ஆகாமல் சோதிக்கிறது.

இவர்கள் அல்லாமல் புகழ், லிவிங்ஸ்டன், சாம்ஸ், பாவெல் நவகீதன், சூப்பர்குட் சுப்பிரமணி எனப் பல பரிச்சயமான முகங்கள் வந்து போகிறார்கள். ஆனால், யாருக்குமே அழுத்தமான பாத்திரங்கள் இல்லை.

Mustafa Mustafa Review | முஸ்தபா முஸ்தபா விமர்சனம்
Mustafa Mustafa Review | முஸ்தபா முஸ்தபா விமர்சனம்

நாயகிகளாக மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரிக்கும் பெரிய வேலை இல்லை. கேமியோ பாத்திரத்தில் ஐஸ்வர்யா தத்தா. அவரது கதாபாத்திர வரைவும் மொத்தமாகவே அபத்தமானதாக இருக்கிறது. காமெடி படத்தில் சிரிப்புக்கு நேரெதிர் ரியாக்ஷனே பல காட்சிகளுக்கு வருவது பெரிய மைனஸ்.

ஒரு காமெடி படத்திற்கான மீட்டரில் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் விஷ்ணு ஸ்ரீ. ஜோன்ஸ் ராபர்ட்டின் பாடல்கள் மற்றும் இசையிலும் பெரிய குறை இல்லை. படத்தை 2 மணிநேரத்திற்குள் வைத்த எடிட்டர் தினேஷ் பொன்ராஜின் முடிவு சரியானதே.

நண்பர்கள் கலாட்டா செய்யும் ஜாலியான காமெடி படத்திற்கு இந்த ஒன்லைனே போதுமானது. ஆனால், திசை தெரியாமல் எங்கெங்கோ திரைக்கதையை இழுத்துச் செல்கிறார் இயக்குநர் பிரவீன் சரவணன்.

Mustafa Mustafa Review | முஸ்தபா முஸ்தபா விமர்சனம்
Mustafa Mustafa Review | முஸ்தபா முஸ்தபா விமர்சனம்

மிகவும் செயற்கையாக நடந்தேறும் விஷயங்கள் எமோஷனலாகவும் நம்மைத் தொடவில்லை; அடுத்து என்ன என்ற பரபரப்பும் இல்லை. இன்றைய 'யூத்'களை கவர வேண்டும் என மீம்ஸ், ட்ரெண்டில் இருக்கும் விஷயங்கள் எனப் பலவற்றைச் சேர்த்திருக்கிறார்கள். 

எதுவுமே பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்தக் கதையே 2K கிட்ஸ் பெண்களிடம் சுரேஷ் ரவி சொல்லும் கதையாகவே விரிகிறது. இப்படி ட்ரெண்டில் இருக்க முயற்சி செய்யும் அவுட்டேட்டட் படமாகவே ஏமாற்றம் தருகிறது இந்த நண்பர்கள் கீதம்!

Mustafa Mustafa Review | முஸ்தபா முஸ்தபா விமர்சனம்
Mustafa Mustafa Review | முஸ்தபா முஸ்தபா விமர்சனம்

மொத்தத்தில், நம்மைச் சிரிக்க வைக்கும் இந்த நண்பர்கள் கூட்டணி வெற்றிபெறவில்லை.

Kadhal Reset Repeat Review: 'அம்னீஷியா' நாயகி, 'ஒன் சைடு லவ்' நாயகன்; எப்படி இருக்கு இந்த லவ் படம்?

இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அதிதி (ஜியா ஷங்கர்) 'ஃப்ளை ஹை' என்ற மியூசிக்கல் பேண்டில் பாடகியாக இருக்கிறார். அதில் இருக்கும் ஹரிச்சந்திரனுக்கும் (அர்ஜுன் அசோகன்) அ... மேலும் பார்க்க

வடம் விமர்சனம்: 'முரட்டுக் காளை' கதாநாயகனும், தேடிவரும் பகையும் - இது மற்றுமொரு மதுரை சினிமா!

சிங்கம்புணரியில் வசிக்கும் வெற்றி (விமல்), பாண்டி முனி என்கிற காளை மாட்டை அன்போடும் வளர்க்கிறார். மிகவும் நேர்மையானவராக இருக்கும் அவருடைய தந்தை சந்தனவேல்தான் (நரேன்) ஊருக்கே தலைவர். வடமஞ்சு போட்டியில்... மேலும் பார்க்க

Texla: 'அனிருத் கதாநாயகனாக நடிப்பது என்பது..!' - லதா ரஜினிகாந்த்

'லாம் சலாம்' படத்திற்கு பிறகு 'டெக்ஸ்லா' என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். ... மேலும் பார்க்க

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகி பாபுவின் 'ஆன் ஆர்டினரி மேன்' ஷூட்டிங்! பரபர அப்டேட்ஸ்!

டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன். யோகிபாபுவை வைத்து அவர் இயக்கும் 'an ordinary man'படத்தின் அறிவிப்பும், முன்னோட்ட வீடியோவும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தி... மேலும் பார்க்க

பவழ மல்லி: 'அட்லீ சார் என்கிட்ட முதல்ல அந்தக் கேள்வியை தான் கேட்டாரு.!' - சாய் அபயங்கர்

சாய் அபயங்கரின் 'பவழ மல்லி' என்ற புதிய ஆல்பம் பாடல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் வெளியாக இருக்கிறது. தவிர அல... மேலும் பார்க்க