செய்திகள் :

Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' - நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா

post image

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார். 'கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார்.

நடிகர் விஜய்

ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார். விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர். அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார்.' உள்ளிட்டப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், நடிகர் விஜய் பிரபல நடிகையுடன் திருமண விழாவில் பங்கேற்றது பெரும் பேசுபொருளானது.

இந்த நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதில், ``எங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, எங்கள் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். பரஸ்பர சம்மதத்துடன் பிரிய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன்.

பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட எனக்கு இந்தியாவில் வேறு இருப்பிடம் இல்லை என்பதால், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை, கடந்த 26 ஆண்டுகளாக விஜய்யுடன் வசித்து வந்த நீலாங்கரையில் உள்ள அவர் இல்லத்திலேயே தொடர்ந்து வசிப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும்." எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

விஜய் - சங்கீதா

முதற்கட்டமாக நீலாங்கரை இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டபோது விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுக்கப்பட்டு, மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சங்கீதா நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தெரிகிறது. அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Christopher Tilak: "உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்" - கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி ... மேலும் பார்க்க

`முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..!' - இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள்! | அரசியல் ஆடுபுலி 8

`எம்.எல்.ஏ. ஆகாமல் முதலமைச்சர்'அரசியல் ஆடுபுலி 8தமிழ்நாட்டு அரசியலில், எம்.எல்.ஏ. ஆகாதவர்கள், முதலமைச்சர் ஆன ஆடுபுலி ஆட்டங்கள் அவ்வப்போது நடந்துள்ளன. ராஜாஜி, காமராஜர், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் எம்.... மேலும் பார்க்க

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர் கப்பலை அமெரி... மேலும் பார்க்க

Iran - America: `நியூயார்க் மேயரையே நியமிக்க முடியாதவர் ட்ரம்ப்' – டெல்லியில் ஈரான் அமைச்சர் காட்டம்

டெல்லியில் நடைபெற்று வரும் 'ரைசினா டயலாக்' சர்வதேச மாநாட்டில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜாதே கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் உரையாற்றிய காதிப் ஜாதே, ``அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்... மேலும் பார்க்க

நேபாளத் தேர்தல் 2026: ராப் பாடகர் டு பிரதமர்; 'ஜென் Z' ஆதரவுடன் முன்னிலையில் பலேன் ஷா!

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 'ஜென் ஸீ' (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞர... மேலும் பார்க்க

``எப்ஸ்டீன் அழைத்துச் சென்றார்; ட்ரம்ப் என்னை அடித்து.." - பகீர் பாலியல் குற்றச்சாட்டை வைக்கும் பெண்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவரின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நீதித்துறை, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெ... மேலும் பார்க்க