செய்திகள் :

நேபாளத் தேர்தல் 2026: ராப் பாடகர் டு பிரதமர்; 'ஜென் Z' ஆதரவுடன் முன்னிலையில் பலேன் ஷா!

post image

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 'ஜென் ஸீ' (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பலேன் ஷாவின் (Balen Shah) 'ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி' (RSP) மிகப்பெரிய வெற்றிபெறும் எனக் கூறப்படுகிறது.

மொத்தம் உள்ள 165 தொகுதிகளில், 144 தொகுதிகளுக்கான தரவுகளின்படி, RSP கட்சி 3 இடங்களை வென்றுள்ளதுடன், 104 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பலேன் ஷா
பலேன் ஷா

நேபாளி காங்கிரஸ் 2 இடங்களை வென்று 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிபிஎன்-யுஎம்எல் (CPN-UML) 10 தொகுதிகளிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. காத்மாண்டுவின் 10 தொகுதிகளிலும் RSP கட்சியே முன்னிலை வகிக்கிறது.

காத்மாண்டுவின் மேயராக இருந்த 35 வயது பொறியாளர் பலேந்திர ஷா (பலேன்), ஜாபா-5 தொகுதியில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை விடப் பன்மடங்கு அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களின் போது இடைக்கால அரசை வழிநடத்தப் பலேனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு முழு பதவி காலத்திற்குப் பிரதமராக விரும்புவதாகக் கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் ஜனவரி மாதம் ரவி லாமிச்சானே தலைமையிலான RSP கட்சியில் இணைந்து, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 18 ஆண்டுகளில் 14 அரசாங்கங்களைக் கண்ட நேபாளத்தில், இந்தத் தேர்தல் ஒரு நிலையான ஆட்சியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரந்தீர் ஜெய்ஸ்வால்

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நேபாளத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கிறது. புதிய அரசுடன் இணைந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு முடிவு கட்டுதல், நல்லாட்சி, வாரிசு அரசியலை ஒழித்தல் மற்றும் அரசியலில் தலைமுறை மாற்றம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 'ஜென் ஸீ' இளைஞர்கள் நடத்திய போராட்டமே இந்தத் தேர்தலுக்கு அடிப்படையாக அமைந்தது. தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடதக்கது.

Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' - நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்று... மேலும் பார்க்க

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர் கப்பலை அமெரி... மேலும் பார்க்க

Iran - America: `நியூயார்க் மேயரையே நியமிக்க முடியாதவர் ட்ரம்ப்' – டெல்லியில் ஈரான் அமைச்சர் காட்டம்

டெல்லியில் நடைபெற்று வரும் 'ரைசினா டயலாக்' சர்வதேச மாநாட்டில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜாதே கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் உரையாற்றிய காதிப் ஜாதே, ``அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்... மேலும் பார்க்க

``எப்ஸ்டீன் அழைத்துச் சென்றார்; ட்ரம்ப் என்னை அடித்து.." - பகீர் பாலியல் குற்றச்சாட்டை வைக்கும் பெண்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவரின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நீதித்துறை, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெ... மேலும் பார்க்க

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேலின் ‘ப்ளூ ஸ்பாரோ’ ஏவுகணை! - முழு விவரம்!

ஈரானின் உச்ச தலைவராக கடந்த 37 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்க... மேலும் பார்க்க

தடைபோடும் அதிமுக; தாண்டிச் செல்லும் பாமக - அதகளப்படும் ஆற்காடு தொகுதி

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியில், கடந்த முறைபோல அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிட விரும்புகிறது. இந்தத் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, பா.ம.க வேட்பாளராகக் களமிறங்கியவர் பா.ம.க... மேலும் பார்க்க