செய்திகள் :

பவழ மல்லி: 'அட்லீ சார் என்கிட்ட முதல்ல அந்தக் கேள்வியை தான் கேட்டாரு.!' - சாய் அபயங்கர்

post image

சாய் அபயங்கரின் 'பவழ மல்லி' என்ற புதிய ஆல்பம் பாடல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் வெளியாக இருக்கிறது.

தவிர அல்லு அர்ஜுன் - அட்லி இணையின் பிரமாண்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் உருவாகும் 'பென்ஸ்' திரைப்படத்திலும், தனுஷின் 'D 55' படத்திலும் இசையமைக்கிறார்.

சாய் அபயங்கர்
சாய் அபயங்கர்

இந்நிலையில் 'பவழ மல்லி' என்ற தனது 5-வது ஆல்பம் பாடலை வெளியிட்டிருக்கிறார் சாய் அபயங்கர்.

ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார்.

இப்பாடல் வெளியீட்டு விழா நேற்று(மார்ச்.5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சாய் அபயங்கர், 'கருப்பு' திரைப்படம் ஏப்ரலில் வெளியாகிறது. தற்போது தனுஷ் சாருடைய 'D55' படம் நடந்து கொண்டிருக்கிறது.

அல்லு அர்ஜூன் சார் - அட்லீ அண்ணா படம் கம்போசிங் நடக்கிறது. நான் அட்லீ அண்ணாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

என்னை அவர் முதலில் சந்தித்த போது, இந்தப் படம் ஒப்பந்தமாகவில்லை. நான் ஒரே ஒரு பாட்டை போட்டு காட்டினேன், அதைக் கேட்ட அடுத்த நொடி, என்னுடைய அடுத்த படத்தில் நீ இசையமைக்கிறீயா? என்று கேட்டார்.

எனக்கு தலையே சுத்திவிட்டது. அவர் என் மேல் வைத்த நம்பிக்கையால் தான், எனக்கு என் மேல் நம்பிக்கை இன்னும் அதிகமானது" என்று பேசியிருக்கிறார்.

பவழ மல்லி
பவழ மல்லி

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வரும் ஹேட்டர்ஸை கையாள்வது எப்படி என கேட்கபட்டது. அதற்கு சாய் அபயங்கர், " 'காதல் கொண்டேன்' படத்தில் ஒரு வசனம் வரும், `வெறி வேணும்டா வெறி பயங்கரமாக வேலை செய்யணும்னு வெறி வேணும்'. அது என்னுடைய பெற்றோர்களால், குருவால் கிடைத்திருக்கிறது.

செம்மையாக இசையமைப்பது மட்டும் தான் என்னுடைய வேலை. எதை செய்தாலும் 100 சதவிகித உழைப்போடு செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் ஆசை.

நெருப்பில் காலை வைத்துவிட்டு எரிகிறது என்றால் அது எரிய தான் செய்யும். ஆனால் அதை எல்லாம் தாண்டி ஜாலியாக வேலையை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்." என்றார்.

Texla: 'அனிருத் கதாநாயகனாக நடிப்பது என்பது..!' - லதா ரஜினிகாந்த்

'லாம் சலாம்' படத்திற்கு பிறகு 'டெக்ஸ்லா' என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். ... மேலும் பார்க்க

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகி பாபுவின் 'ஆன் ஆர்டினரி மேன்' ஷூட்டிங்! பரபர அப்டேட்ஸ்!

டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன். யோகிபாபுவை வைத்து அவர் இயக்கும் 'an ordinary man'படத்தின் அறிவிப்பும், முன்னோட்ட வீடியோவும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தி... மேலும் பார்க்க

Oh Butterfly Review: பெண்ணின் உளவியல் சிக்கல்களைப் பேசும் கதை; சுவாரஸ்யம் சேர்க்கிறதா?

திருமணமான பிறகு முதல் முறையாக அர்ஜுனும் (அட்டுல்) கௌரியும் (நிவேதிதா சதீஷ்) கொடைக்கானலுக்குச் செல்கிறார்கள். திருமணமான மறுநாளே வேலை பறிபோனதால் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் அர்ஜுன். திருமணத்த... மேலும் பார்க்க

'பாட்டில் தாதா' டு 'ஸ்டீபன்' - கடந்தாண்டு அறிமுகமான இயக்குநர்களின் அடுத்தப்பட அப்டேட்ஸ் | Exclusive

வருடந்தோறும் பல அறிமுக இயக்குநர்கள் குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி, பளிச்சிடும் பட்டியலில் முன் நிற்பார்கள். எப்போதுமே, அறிமுக இயக்குநர்கள் முன் பல சவால்கள் நிறைந்திருக்கும். பட்ஜெட், கதை கேட்கும் நடி... மேலும் பார்க்க