நடிகர், நடிகைகள், சமூகப் போராளிகள் பங்கேற்ற ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழா -...
ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்
ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை.
எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வணிகப் போக்குவரத்துப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது.
இதனால், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துதான் வர்த்தகம் ஆகி வருகிறது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களைக்கூட எட்டலாம் என்கிற அச்சம்கூட இருந்து வருகிறது.
இந்த நிலையில், கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் அல்-காபி கச்சா எண்ணெய் விலை குறித்துப் பேசியுள்ளார்.

அவர் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்... அவர் சொல்வது ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ளலாம்.
உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் டாப் 15 நாடுகளில் கத்தாரும் ஒன்று. உலக அளவில் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் டாப் மூன்றாவது நாடு கத்தார்.
இந்த இடத்தில் இருக்கும் கத்தார், கத்தாரின் அமைச்சர் சொல்வது கச்சா எண்ணெய் வணிகத்தில் மிக முக்கியமானது.
அப்படி கத்தார் எரிசக்தி அமைச்சர் என்ன கூறியிருக்கிறார்?
"இப்போது ஈரானில் நடந்து வரும் போர் தொடர்ந்தால், வளைகுடா நாடுகள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் எரிசக்திகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும்.
இது உலகின் எரிசக்திச் சந்தையைப் பெரிதும் பாதிக்கலாம். உலகப் பொருளாதாரங்களைக் கீழே தள்ளலாம்.
ஒருவேளை இந்தப் போர் இப்போதே நிறுத்தப்பட்டாலும், வழக்கம் போல, கத்தார் தங்களது டெலிவரிகளை ஆரம்பிக்க வாரங்கள் அல்லது மாதங்கள் கணக்கில் ஆகும்.
மேலும், இந்தப் போர் ஒரு பேரல் எண்ணெயின் விலை 150 டாலருக்குக்கூட தள்ளலாம்" என்று ஃபைனான்சியல் டைம்ஸிற்குத் தந்த பேட்டியில் கூறியுள்ளார்.















