செய்திகள் :

`4,000 ஓட்டுக்காக கம்யூனிஸ்ட்டுக்கு தொகுதியை கொடுப்பதா?' - அறிவாலயத்தில் குமுறும் உடன்பிறப்புகள்

post image

இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்யூனிஸ்ட்டுக்கு தூக்கி கொடுத்துடாதீங்க!' என குமுறுகின்றனர் பவானிசாகர் (தனி) தொகுதி உடன்பிறப்புகள்.

சுந்தரம்
சுந்தரம்

பவானிசாகர் தொகுதிக்காக விருப்பமனுவை தாக்கல் செய்துவிட்டு அறிவாலயத்தை சுற்றிக் கொண்டிருந்த சில உடன்பிறப்புகளிடம் பேச்சுக் கொடுத்தோம். '2006 இல் கடைசியாக பவானிசாகர் தொகுதியில் திமுக வென்றது. அதன்பிறகு தொகுதி எங்கள் கைக்கு வரவே இல்லை. 2011 இல் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இருந்தது. கம்யூக்களுக்கு பவானிசாகர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

பி.எல்.சுந்தரம் என்பவர் போட்டியிட்டு வென்றார். 2016 இல் கம்யூக்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு தாவி விட்டார்கள். அப்போதும் பி.எல்.சுந்தரம்தான் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் ஈஸ்வரன் 83,000 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சத்யா தோற்றார். பி.எல்.சுந்தரம் மட்டும் 27,000 வாக்குகளை பிரித்து திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

2021 இல் கம்யூக்கள் திமுக கூட்டணிக்கு வந்துவிட்டனர். அப்போதும் தொகுதி கம்யூக்களுக்கே சென்றது. கடந்த தேர்தல்களில் திமுகவை தோற்கடித்த திமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்த பி.எல்.சுந்தரம்தான் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பண்ணாரி என்பவர்தான் போட்டியிட்டார். அந்த கட்சிக்குள்ளேயே பலருக்கும் அவரை யாரென்று தெரியாது. அப்படிப்பட்ட வேட்பாளரிடம் பி.எல்.சுந்தரம் தோற்றுப்போனார்.

Stalin
ஸ்டாலின்

தொகுதியில் அருந்ததியர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள். அப்படியிருக்க தேவேந்திர குல வேளாளரான சுந்தரத்துக்கு எப்படி மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்? கடந்த காலங்களில் திமுகவினருக்கு எதிராகவே வேலை பார்த்ததால் எங்கள் கட்சிக்குள்ளும் அவருக்கு ஒத்துழைக்க யாரும் தயாராக இல்லை. தொகுதியில் கம்யூக்களுக்கு செல்வாக்கே இல்லை. 2016 இல் மக்கள் நலக்கூட்டணியில் அவர்கள் பெற்ற வாக்குகளில் 20-23 ஆயிரம் வாக்குகள் விஜயகாந்துக்காக விழுந்தது. கம்யூக்களுக்கென 4000-5000 வாக்குகள் மட்டுமே இருக்கும். கம்யூக்களுக்கு தொகுதியை வழங்கி பி.எல்.சுந்தரமே மீண்டும் போட்டியிட்டால், இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அதிமுகவுடன் மறைமுக கூட்டணி அமைத்து நமக்கு தோல்வியை உறுதி செய்துகொடுப்பார்.

ரங்கசாமி, கணேசன், சிற்றரசு, குணசேகரன், கவின் என கட்சிக்காக வேலை பார்த்த பலரும் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். உதயசூரிய ந் நின்றால் மட்டுமே பவானிசாகர் தொகுதியை 20 ஆண்டுகள் கழித்து நம்முடையதாக்க முடியும்.' என்றனர்.

பவானிசாகரில் கட்சியினர் விருப்பப்படி சூரியன் உதிக்குமா? கட்சி முடிவுக்காக காத்திருக்கும் உடன்பிறப்புகள்.

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சம... மேலும் பார்க்க

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வ... மேலும் பார்க்க

"இந்தியா எங்களது சந்தையை 'இப்படி' பிடிக்க முடியாது; சீனாவிடம் செய்த தவறு இனி இல்லை" - அமெரிக்கா

இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ். அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது..."20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த... மேலும் பார்க்க

3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் - பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யே... மேலும் பார்க்க

28 + 1 எனும் மேஜிக் எண் வேலை செய்யுமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க