செய்திகள் :

``16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை" - கர்நாடக முதல்வர் சித்தராமையா!

post image

கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று வெள்ளிக்கிழமை 2026–27-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அவர் உரையாற்றினார். அப்போது, ``அரசியலமைப்பில் வகுத்துள்ள கூட்டாட்சி முறையைப் பின்பற்றாமல் மத்திய அரசு மாநிலத்திற்கு அநீதி இழைக்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் நீண்டகால பொருளாதார மாற்றத்தில், முதலீடுகளுடன் நலத்திட்டங்களை சமநிலைப்படுத்தும் ஒரு வளர்ச்சி உத்தியை மாநில அரசு பின்பற்றி வருகிறது. நாட்டின் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் கர்நாடக மாநிலம் முன்னணியில் உள்ளது. அதிக வரி வருவாயை வழங்கும் முக்கிய மாநிலங்களில் இதுவும் ஒன்றாகும்.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா
சித்தராமையா

2026–27-ம் ஆண்டிற்கான மொத்த செலவு ரூ.4,48,004 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் கர்நாடகா தொடர்ந்து தனித்துவமான பங்கை வகித்து வருகிறது. அதிகரித்து வரும் மொபைல் பயன்பாட்டின் பாதகமான விளைவுகளைத் தடுக்க 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும். அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தைத் தடுப்பதே இந்தத் தடையின் நோக்கமாகும்.

ஐ.ஐ.எஸ்.சி.யின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப பூங்கா, இஸ்ரோ மற்றும் கியோனிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பெங்களூரு ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு மண்டலம் என்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளாகம் அமைக்கப்படும். கடந்த 2025–26 நிதியாண்டின் தொடக்கத்தில், கர்நாடகாவின் ஜிஎஸ்டி வருவாய் ஒவ்வொரு மாதமும் சுமார் 10% என்ற ஆரோக்கியமான வேகத்தில் வளர்ந்து வந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு (Restructuring) பிறகு, இந்த வளர்ச்சி வேகம் 4% ஆகக் கடுமையாகக் குறைந்துவிட்டது.

சிறுவர்கள் மொபைல்
சிறுவர்கள் மொபைல்

வரி விகித மாற்றங்களால் கர்நாடக அரசுக்கு வர வேண்டிய வருவாயில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) சுமார் ரூ. 10,000 கோடி வருவாய் குறையும். அடுத்த நிதியாண்டில் (2026-27) சுமார் ரூ. 15,000 கோடி வருவாய் குறையும். மொத்தமாக இரண்டு ஆண்டுகளில் மட்டும் கர்நாடக அரசுக்கு சுமார் ரூ.25,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அல்லது ஜிஎஸ்டி கவுன்சில் சில பொருட்களுக்கான வரி விகிதங்களைக் குறைத்திருக்கலாம் அல்லது மாற்றியிருக்கலாம். கர்நாடகா ஒரு பெரிய நுகர்வு மாநிலமாக இருப்பதால், இந்த வரி மாற்றங்கள் நேரடியாக மாநில அரசுக்கு வரும் பணத்தைக் குறைத்துவிட்டன. வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்த 6% சரிவு மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்." எனக் குறிப்பிட்டார்.

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சம... மேலும் பார்க்க

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வ... மேலும் பார்க்க

"இந்தியா எங்களது சந்தையை 'இப்படி' பிடிக்க முடியாது; சீனாவிடம் செய்த தவறு இனி இல்லை" - அமெரிக்கா

இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ். அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது..."20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த... மேலும் பார்க்க

`4,000 ஓட்டுக்காக கம்யூனிஸ்ட்டுக்கு தொகுதியை கொடுப்பதா?' - அறிவாலயத்தில் குமுறும் உடன்பிறப்புகள்

இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்ய... மேலும் பார்க்க

3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் - பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யே... மேலும் பார்க்க