செய்திகள் :

இரு தொகுதிகளை குறிவைக்கும் சிற்றரசு; பின்னணியில் உதயநிதி? - யாருக்கு சீட், யாருக்கு கல்தா?

post image

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்துவருகின்றனர். கடைசி நாளான மார்ச் 6-ம் தேதி சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது தி.மு.க-வுக்குள் பேசு பொருளாகியிருக்கிறது.

தி.மு.க-வின் சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளரான சிற்றரசு, துணை முதல்வரும் தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதியின் தீவிர ஆதரவாளர். சேப்பாக்கம் - திருவேல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய மூன்று தொகுதிகள் அவரது மாவட்டத்தின்கீழ் வருகின்றன. எனவே துணை முதல்வரின் சேப்பாக்கம் - திருவேல்லிக்கேணி தொகுதியை சிற்றரசுதான் கண்காணித்து வருகிறார்கள். பொதுவாக தி.மு.க-வில் மாவட்டப் பொறுப்பில் இருப்பவர்கள் எம்.எல்.ஏ-க்களாக இருப்பது வழக்கம். ஆனால், சிற்றரசு மாநகராட்சி பொறுப்பில்தான் இருக்கிறார்.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள் சிலர், "சிற்றரசு மாவட்டத்தின்கீழ் வரும் அண்ணாநகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் எம்.கே மோகன். வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரது மகன் கார்த்திக்கை களமிறக்கவுள்ளார்.

அண்ணா நகர் தொகுதி தனக்கு வேண்டும் என விருப்ப மனுவையும் தாக்கல் செய்துவிட்டார் கார்த்திக். தந்தை-மகன் இருவருமே ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமானவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சிற்றரசு, எழிலன்

அதேபோல், ஆயிரம் விளக்கு தொகுதியை மீண்டும் மருத்துவர் எழிலன் எதிர்பார்க்கிறார். இதற்கிடையில்தான், மாநகராட்சி பணிகள் நிலைக்குழு தலைவராக இருக்கும் சிற்றரசு, தனது மாவட்டத்துக்கு கீழ்வரும் ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய இரண்டில் ஒன்றை கேட்டிருக்கிறார்" என்றவர்களிடம், `ஆயிரக்கணக்காணோர் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள், சிற்றரசு தாக்கல் செய்வதில் என்ன விஷேசம்' எனக் கேட்டோம்,

"தி.மு.க-வில் அடையாளம் இல்லாத நிர்வாகிகள் தாமாக விருப்ப மனு அளிப்பார்கள். ஆனால், மா.செ-க்கள் போன்ற முக்கியப் பொறுப்பில் தலைமையின் அனுமதியில்லாமல் விருப்ப மனு தாக்கல் செய்வதில்லை. அதிலும் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறனுடன் அவர் வந்திருந்தது குறிப்பிடதக்கது. சிற்றரசு-வை பொறுத்தவரை எந்தவொரு காரியமாக இருந்தாலும் உதயநிதியிடம் அனுமதிபெறாமல் செய்யமாட்டார். எனவே உதயநிதியின் அனுமதியின் பெயரிலேயே விருப்பமனு அளித்திருப்பார்." என்றார்.

யாருக்கு சீட்.. யார்க்கு கல்தா.. பொறுத்திருந்து பார்ப்போம்!

விவசாய கடன் தள்ளுபடி; இரு விமான நிலையங்களிடையே ரூ22000 கோடியில் மெட்ரோ ரயில்- மகா., பட்ஜெட் ஹைலைட்ஸ்

மகாராஷ்டிரா பட்ஜெட்டை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தாக்கல் செய்தார். அதில் மும்பையில் வடாலாவில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை ரு.23,487 கோடியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் தி... மேலும் பார்க்க

ADMK: கட்சிக்கு ரூட் க்ளியர்.. ஆட்சிக்கு? எடப்பாடி பழனிசாமி முன் நிற்கும் சவால் தான் என்ன?

அ.இ.அ.தி.மு.க-வை தொடங்கிய எம்.ஜி.ஆர் மற்றும் தொடர்ந்து வழி நடத்திய ஜெயலலிதா ஆகிய இருவருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பதவியில் கொஞ்சம் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.ஜெயலலிதா மறை... மேலும் பார்க்க

இன்னும் முடிவாகாத சீட்; வேலைகளை ஜரூராகத் தொடங்கி விட்ட மநீம பிரபலங்கள்! - இவர்கள்தான் வேட்பாளர்களா?

திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது.அக்கட்சி சார்பில் பொதுச் செயலாளர் அருண... மேலும் பார்க்க

``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்!" - விஜயதரணி பேட்டி

தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி.க... மேலும் பார்க்க

விருகம்பாக்கத்தை கேட்கும் பிரேமலதா; திமுக MLA-வான மகனுக்காக எடப்பாடியை சந்தித்தாரா விக்கிரமராஜா?

சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் தந்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவருமான விக்கிரமராஜா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்... மேலும் பார்க்க

`உறுதியாகாத கூட்டணி' - காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.கவினர்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்... மேலும் பார்க்க