செய்திகள் :

``காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்!" - விஜயதரணி பேட்டி

post image

தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் விஜயதரணி.

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி 2024-ம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனிலிருந்து கமலாலயத்திற்கு தாவினார். ஆனால் அப்போது முதல் இப்போது வரை அந்தக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் சூழலில், "மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?", "பாரதிய ஜனதாவில் சேர்ந்த முடிவு தவறென நினைக்கிறீர்களா?" என்பன போன்ற சில கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம்.

சத்திய மூர்த்தி பவன்

``'கட்சி கொறடா, மூன்று முறை எம்.எல்.ஏ என காங்கிரஸில் பிசியாக இருந்தீங்க. வரும் தேர்தலில் மீண்டும் விளவங்கோடு மக்கள்கிட்ட ஓட்டு கேட்டு போக வாய்ப்பு உள்ளதா?"

``கட்சிதான் அதுகுறித்து முடிவெடுக்கும். தொடர்ந்து மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே காங்கிரஸ் கட்சியில இருந்து வெளியேறினேன். பா.ஜ.க தலைமைக்கும் இது தெரியும். அதனால தலைவர்கள் முடிவெடுப்பாங்க. அதுக்கு இன்னும் அவகாசம் இருக்கு."

கமலாலயம்
கமலாலயம்

``ஆனாலும் பெரிய பொறுப்புகள் எதுவும் பி.ஜே.பி.யில் தரப்பட்டதாகத் தெரியவில்லையே?"

``மாநில அளவில் செயற்குழு உறுப்பினரா இருக்கேன். இதுவே முக்கியமான பொறுப்புதான். மாவட்டத்தில் நடக்கிற கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கிறாங்க. தவிர எந்தவொரு முக்கிய முடிவுன்னாலும் கருத்து கேக்கறாங்க. இதுக்கு மேல என்ன செய்யணும்?

23 வருஷம், அதாவது என் இளமைப் பருவத்தையெல்லால் காங்கிரஸ் கட்சிக்காகச் செலவு செய்தேன். அதுக்குப் பிறகுதன் அங்கீகாரம் தந்தாங்க. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்யணும்னு நான் நினைச்சப்ப இடையூறு தந்தாங்க. அதனாலேயே ஒருகட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன். ஆனா அப்படி வெளியேறிய பிறகும் எம்.பி. தேர்தல் சீட்டுக்கு ஆசைப்பட்டுதான் கட்சி மாறினதா வதந்தி பரப்பினாங்க. அது உண்மையில்லை. இங்க வந்து 23 மாதங்கள்தானே ஆகுது. ஆதனால பா.ஜ.க. வில் அங்கீகாரம் கிடைக்கலைங்கிறது நிஜமில்லை."

NDA கூட்டணி மாநாடு
NDA கூட்டணி மாநாடு

``தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கா?"

``களம் எங்களுக்குச் சாதகமாகவே இருக்கு. எதிர்க்கட்சி கூட்டணி ஓவர் லோடுல போயிட்டிருக்கு. போற வர்றவங்களையெல்லாம் கூட்டணிக்கு இழுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வாக்கு சதவிகிதமே இல்லைனு நிரூபணமான கட்சிகளைக் கூட கணக்குக்காக சேர்த்திருக்காங்க. காரணம் தோல்வி பயம். எங்க கூட்டணியில எந்தச் சிக்கலும் இல்லை.. வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு."

tvk

``காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீடிக்குமா அல்லது வெளியேறி தவெக பக்கம் போகுமா? அந்தக் கட்சியில் பல வருடம் இருந்த உங்க அனுபவத்தில் சொல்லுங்களேன்."

``காங்கிரஸ் கட்சியில் இன்னைக்கு தேதிக்கு 99 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வேண்டாம்னு சொல்றதா தெரிய வருது. இவங்க சூடு சொரணை உள்ளவர்கள். 1 சதவிகிதம் பேருக்கு அது கிடையாது. அவங்க திமுக அரசுகிட்ட இருந்து சில பல சலுகைகளை அனுபவிச்சுகிட்டு அங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டு வர்றாங்க. யார் பேச்சை கேக்கணும்கிறதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் தீர்மாணிக்கணும்." என்றார்.

முழுமையான பேட்டியை காண...

விருகம்பாக்கத்தை கேட்கும் பிரேமலதா; திமுக MLA-வான மகனுக்காக எடப்பாடியை சந்தித்தாரா விக்கிரமராஜா?

சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவின் தந்தையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவருமான விக்கிரமராஜா, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்... மேலும் பார்க்க

`உறுதியாகாத கூட்டணி' - காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.கவினர்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்... மேலும் பார்க்க

அடாவடி இலங்கை ராணுவம்; அச்சத்தில் தமிழ் மக்கள்.! - கச்சத்தீவில் இருந்து நேரடி ரிப்போர்ட்

தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல் தவெக தலைவர் விஜய் வரை கச்சத்தீவு அரசியலை பேசி வருகிறார்கள். இந்த பரபரப்புகளுக்கு மத்தி... மேலும் பார்க்க

`அதிமுக வலுவாகியிருக்கு, பாஜக வளர்ந்திருக்கு; இதுபோதும் அவங்க மாடலை உடைக்க.!' - சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு கட்டத்தில் தலைமைக்கும் இவருக்கும் உரசல் வர, "ஜெயலலிதா என்னை அடித்தா... மேலும் பார்க்க

`உதயசூரியன் சின்னத்துக்கு ஓகே சொன்ன கமல்!' - மநீம, திமுக டீல் என்ன?

தி.மு.க கூட்டணிக்குள் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. இதற்கிடையில் 'உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்' என்ற தி.மு.க-வின் கண்டிஷனுக்கு ம.நீ.ம க்ரீன்... மேலும் பார்க்க

Iran: "இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்" - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது.இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று,... மேலும் பார்க்க