செய்திகள் :

'இந்த' முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்

post image

ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.

ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ...

Financial Times - பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.

ஈரான் போர்
ஈரான் போர்

British Daily - அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று - டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது.

அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று 'எங்கே இருந்தார்?' என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது.

சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்ட... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்' - நிகிதா பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட... மேலும் பார்க்க

'இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு...' - தேர்தல் சர்ச்சைக்கு தவெக ஆதரவு முஸ்தபா விளக்கம்

தவெகவின் 'ஒரே' கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் கட்சி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என ஒரு செய்தியை அக்கட்சியின் தலைவர் முஸ்தபாவின் விளக்கத்தோடு வெளியிட்டிருந்தோம். செய்த... மேலும் பார்க்க

`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் `டீல்' பின்னணி

“நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மண... மேலும் பார்க்க

'குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்!' - அறிவாலயத்தில் கமல் பாணியில் ம.நீ.ம பேச்சுவார்த்தை

திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தது.அருணாச்சலம்அக்கட்சி சார்பில் பொதுச்செயலா... மேலும் பார்க்க