செய்திகள் :

துலாம்: `ராஜ யோகம் காத்திருக்கிறது; வாழ்க்கை மாறும்!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

post image
இந்த ராசியின் அடையாளம் தராசு. இந்த ராசியில் சனி உச்சனாக இருப்பார். சூரியன் நீசம் பெறுவார். மென்மையான அணுகு முறை, சுயமரியாதை, செல்வாக்கைக் காப்பதில் தனிக் கவனம், நல்ல மனம், ஈவு - இரக்கம், பரோபகாரக் குணம், செல்வகடாட்சம் பெறும் அமைப்பு உங்களுக்கு உண்டு.
துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, 6-ல் அமரும் சனி பகவான், விபரீத ராஜயோகத்தை அள்ளித் தரப் போகிறார். வாழ்க்கையே மாறும். முக்கியமான காரியங்களைப் பக்குவமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

2. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாழ்க்கைத் துணைவர் உறுதுணையாக இருப்பார். பிள்ளை வரத்தை எதிர்நோக்கியுள்ள அன்பர்களுக்கு, அந்த வரம் கிடைக்கும். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள்.

3. சனி பகவான் பூரட்டாதியில் பயணிக்கும் காலத்தில், பழைய கடன் தீரும். வீடு கட்ட கடனுதவி கிடைக்கும். எனினும் சமூக வலைத்தளங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வாகனங்களைச் சரியானமுறையில் பராமரியுங்கள்.

4. சனி உத்திரட்டாதியில் பயணிக்கும் காலமான 2.04.2026 முதல் 14.4.2027 வரையிலான காலம் சாதகமாகும். திடீர் பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். திருமணம், குழந்தைப் பாக்கியம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

சனி பகவான்

5. அதேபோல் 14.4.2027 முதல் 24.4.2028 வரை சேமிப்புகள் அதிகரிக்கும் காலமாகும். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஒரு சிலர் வெளிநாட்டுக்குச் சென்று வருவார்கள்.

6. சனி பகவான் 28.7.2027 முதல் 13.12.2027 வரை வக்ரத்தில் செல்வதால், வாகனத்தைக் கவனமாக இயக்கப்பாருங்கள். முன்கோபம் வேண்டாம்.

7 உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை சனி பார்ப்பதால், தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். 12-ம் வீட்டைப் பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு. உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

8. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்குக் குடும்பத்தில் நல்லது நடக்கும். தாம்பத்தியம் இனிக்கும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உயர்ந்த பொறுப்புகள் தேடி வரும். தாய்வழி உறவினர்களுடன் மனக் கசப்புகள் நீங்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும்.

9. பொதுவாகவே இந்த ராசியினருக்குப் பல்வேறு பிரச்னைகளுக் குமான தீர்வுகள் உண்டாகும் காலம் இது. வழக்குகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.

10. வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களிடையே அனுசரித்துப் போவீர்கள். ரியல் எஸ்டேட், உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

11. உத்தியோகத்தில், உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரி பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். ஒருசிலர், அதிகச் சம்பளத்துடன் நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் உண்டு. கணினித் துறையில் இருப்பவர்களுக்கு, அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங் களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்: ஜென்மச் சனி என்ன செய்யும்? சிக்கலற்ற விஷயங்கள் இவைதான் | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்மீனம்மீன ராசிக்கு அதிபதி குரு. ஆன்மிக விஷயத்தில் நாட்டம், இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்... மேலும் பார்க்க

கும்பம்: `விலகப்போகும் சனி... வாழ்க்கை மாறுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்கும்பம்பொதுவாகவே, கும்ப ராசிக்கு உச்சம்பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவார். நீசம் பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்டவைப்பார். கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழ... மேலும் பார்க்க

மகரம் : `தொட்டது துலங்கும்; சொந்தவீடு யோகம் உண்டு!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சிமகரம்மகர ராசியின் அதிபதி சனி. உழைப்பால் ஈட்டிய பெருமைகள், செல்வங்கள் இவர்களின் வாழ்வை வளமாக்கும். இந்த ராசிக்காரர்கள், ஒரு வேலையை ஏற்றால் முடிக்கும் வரை விடமாட்டார்கள். பொறு... மேலும் பார்க்க

தனுசு: `எதையும் சமாளிக்கும் தைரியம்; வீண் செலவுகள் வேண்டாம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சிதனுசுதனுசு ராசிக்கு அதிபதி குரு. தனுசு ஸ்திரமும் சரமும் சம பங்கில் கலந்த ராசி. இதை `உபய ராசி’ என்று ஜோதிடம் சொல்லும். புகழ் பாடி, காக்கா பிடித்து காரியம் சாதிப்பது இவர்களுக்... மேலும் பார்க்க

விருச்சிகம்: `பணப்பை நிரம்பும்; ஆனால் இந்த விஷயங்களில் கவனம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்விருச்சிகம்இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதில் பிறந்த அன்பர்களுக்கு, எண்ணம், செயலில் ஸ்திரத்தன்மை பளிச்சிடும். எந்த விஷயத்திலும் வெற்றியை இழக்க விரும்பமாட்டார்கள். ... மேலும் பார்க்க

கன்னி: கண்டகச் சனி - `பதற்றம் வேண்டாம், ஆனால் கவனம்' ஏன்? | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்கன்னிகன்னி - ராசிச் சக்கரத்தின் 6-வது ராசி. ராசிக்கு அதிபதி புதன். சனியும் சுக்கிரனும் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்வார்கள். இந்த ராசியில் பிறந்த நீங்கள், புத்த... மேலும் பார்க்க