செய்திகள் :

மீனம்: ஜென்மச் சனி என்ன செய்யும்? சிக்கலற்ற விஷயங்கள் இவைதான் | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

post image
மீன ராசிக்கு அதிபதி குரு. ஆன்மிக விஷயத்தில் நாட்டம், இரக்கம், சட்டதிட்டத்தில் மதிப்பு, நாகரிகமான வாழ்வு, இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் பிடிப்பு, சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை ஆகிய அத்தனையும் இந்த ராசிக்காரர்களிடம் தென்படும். இந்தச் சனிப்பெயர்ச்சி மீன ராசிக்கு எப்படி?
வாக்கிய பஞ்சாங்க சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026 - மீனம்

மீன ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. மீன ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, ஜென்மச் சனியாக அமர்கிறார் சனிபகவான். எனினும் கவலை வேண்டாம். நல்லதையே செய்வார். அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். அவர் ஆட்சிபெற்று சுபத்தன்மை அடைவதால், பணவரவையும் அதிகரிப்பார்.

2. வாழ்வில் நிம்மதி பிறக்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைப் பாக்கியம் உண்டாகும். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தடைப் பட்டிருந்த மகளின் கல்யாணம் விரைவில் நடக்கும். மகனுக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

3. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். எனினும், ஜென்மச் சனி என்பதால், உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை. மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள்.

4. உங்களின் ராசிநாதனும், ஜீவன ஸ்தானாதிபதியுமான குருபகவா னின் பூரட்டாதி சாரத்தில் 6.3.2026 முதல் 2.4.2026 வரை செல்கிறார் சனி பகவான். அப்போது ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில், வேலைச்சுமை இருக்கும்.

சனிபகவான்

5. சனி பகவான் 2.4.2026 முதல் 14.4.2027 வரை உத்திரட்டாதியில் செல்வதால் பணவரவும், செலவுகளும் ஒருங்கே வந்து சேரும். திடீர்ப்பயணங்களும் அலைச்சலும் இருக்கும். அதேபோல் அவர் ரேவதியில் சஞ்சரிக்கும் காலத்தில் தாயாருடன் மனஸ்தாபம் எழலாம். எனினும், சமூகத்தில் நல்ல வளர்ச்சி உண்டு.

6. சனி வக்ரநிலையில் செல்லும்... 15.7.2026 முதல் 30.11.2026 வரை மற்றும் 28.7.2027 முதல் 13.12.2027 வரையிலான காலத்தில், பிரபலங்களின் உதவி கிடைக்கும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு. எனினும் முன் கோபத்தைத் தவிர்க்கவேண்டும். புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும்.

7. இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 3, 7 மற்றும் 10-ம் வீட்டைப் பார்க்கிறார். ஆகவே, வெளி வட்டாரத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிக்கு கால்வலி, கழுத்து வலி வந்து நீங்கும். சனிபகவான் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர், சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

8. இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள், சேமிப்பைப் பயன்படுத்தி ஆபரணங்கள் வாங்குவார்கள். பணிக்குச் செல்வோருக்கு மனப்பாரம் குறையும்; பதவி உயர்வு, சம்பள உயர்வு மகிழ்ச்சி தரும். உறவுகள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

9. வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. அதேநேரம் லாபம் கணிசமாக உயரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு குறையும். ஹோட்டல், கணினி உதிரிபாகங்கள், இரும்பு, வாகனம், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள்.

10. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு எல்லாம் கிடைக்கும். அதேநேரம் வேலைப்பளு கூடும். கணினித் துறையினர், கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.

11. உத்தியோகஸ்தர்களே, மேலதிகாரி உங்களைப் புரிந்துகொள்வார். எனினும் வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும். கணினித்துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பம்: `விலகப்போகும் சனி... வாழ்க்கை மாறுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்கும்பம்பொதுவாகவே, கும்ப ராசிக்கு உச்சம்பெற்ற சனி உயர்வுக்குக் காரணமாவார். நீசம் பெற்றால் செவ்வாயின் பலத்தால் உயர்வை எட்டவைப்பார். கட்டுக்கோப்பான உடல், சுகாதாரமான சூழ... மேலும் பார்க்க

மகரம் : `தொட்டது துலங்கும்; சொந்தவீடு யோகம் உண்டு!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சிமகரம்மகர ராசியின் அதிபதி சனி. உழைப்பால் ஈட்டிய பெருமைகள், செல்வங்கள் இவர்களின் வாழ்வை வளமாக்கும். இந்த ராசிக்காரர்கள், ஒரு வேலையை ஏற்றால் முடிக்கும் வரை விடமாட்டார்கள். பொறு... மேலும் பார்க்க

தனுசு: `எதையும் சமாளிக்கும் தைரியம்; வீண் செலவுகள் வேண்டாம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சிதனுசுதனுசு ராசிக்கு அதிபதி குரு. தனுசு ஸ்திரமும் சரமும் சம பங்கில் கலந்த ராசி. இதை `உபய ராசி’ என்று ஜோதிடம் சொல்லும். புகழ் பாடி, காக்கா பிடித்து காரியம் சாதிப்பது இவர்களுக்... மேலும் பார்க்க

விருச்சிகம்: `பணப்பை நிரம்பும்; ஆனால் இந்த விஷயங்களில் கவனம்!’ | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்விருச்சிகம்இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதில் பிறந்த அன்பர்களுக்கு, எண்ணம், செயலில் ஸ்திரத்தன்மை பளிச்சிடும். எந்த விஷயத்திலும் வெற்றியை இழக்க விரும்பமாட்டார்கள். ... மேலும் பார்க்க

துலாம்: `ராஜ யோகம் காத்திருக்கிறது; வாழ்க்கை மாறும்!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்துலாம்இந்த ராசியின் அடையாளம் தராசு. இந்த ராசியில் சனி உச்சனாக இருப்பார். சூரியன் நீசம் பெறுவார். மென்மையான அணுகு முறை, சுயமரியாதை, செல்வாக்கைக் காப்பதில் தனிக் கவனம்... மேலும் பார்க்க

கன்னி: கண்டகச் சனி - `பதற்றம் வேண்டாம், ஆனால் கவனம்' ஏன்? | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்கன்னிகன்னி - ராசிச் சக்கரத்தின் 6-வது ராசி. ராசிக்கு அதிபதி புதன். சனியும் சுக்கிரனும் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்வார்கள். இந்த ராசியில் பிறந்த நீங்கள், புத்த... மேலும் பார்க்க