செய்திகள் :

"இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது போடாதீர்கள், அது உங்கள் அரசின்.!"- தமிழிசைக்கு சு.வெ பதில்

post image

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என மத்திய அரசு பெயர் சூட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

' இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது' என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் "எங்களது தமிழ் மொழியின் முறையான மொழிபெயர்ப்பை எழுத அறிவுறுத்துங்கள்.

அதிகாரிகளின் தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்" என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைத்திருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜனின் கோரிக்கைக்கு எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுக்கும் வகையில், " இந்தித் திணிப்பை அதிகாரிகளின் மீது தூக்கி போடாதீர்கள்.

இது உங்கள் அரசின் கொள்கை. தேர்தல் வந்தவுடன் உங்களுக்கு பதட்டம் கூடுகிறது.

வந்தே பாரத், தேஜஸ், அந்த்யோதயா, நமோ பாரத், அம்ரித் பாரத், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர், பிரதான் மந்திரி பாரதிய ஜனசௌஷதி கேந்திரா என அனைத்து பெயர்களையும் இந்தியில் மட்டுமே சூட்டியது தான் பாஜக ஆட்சி"என்று பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.

ஈரான் - அமெரிக்கா: இலங்கையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் தாக்குதல் - பரவும் போர் பதற்றம்!

ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து வரும் போரில், ஈரான் அமெரிக்காவின் ராணுவ முகாம்களையும், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கி வருகிறது. அமெரிக்காவும் ஈரான்... மேலும் பார்க்க

பீகார்: முதல்வர் பதவியை துறக்கிறாரா நிதிஷ் குமார்? - துணை முதல்வராகும் வாரிசு? - என்ன நடக்கிறது?

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி போட்டியிட்டது. அரசியல் நிபுணர்களால் 'நிதிஷ் குமார் இந்த தேர்தலில்... மேலும் பார்க்க

திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப்பாடி பழனிசாமி

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்... மேலும் பார்க்க

'புளித்துப் போன காமெடி பண்ணாதீங்க.!'- ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்தற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "நுழைவு... மேலும் பார்க்க

சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்ட... மேலும் பார்க்க