செய்திகள் :

``'கிங்' பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல; பொறுப்பு" - ஷாருக்கான்

post image

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்' கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கானும் நடிக்கிறார்.

ஷாருக்கானுக்கு வழங்கப்படும் கிங் பட்டம் குறித்து குறித்து அவரிடம் ஒரு முறை நிருபர்கள் கேட்டதற்கு, ''எனக்கு 'கிங்' என்ற சொல் ஒருபோதும் அதிகாரத்தைக் குறித்தது கிடையாது. அது எப்போதும் ஒரு பொறுப்பு சார்ந்த விஷயம். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும், நான் சொல்லத் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பை அது உணர்த்துகிறது."என்று தெரிவித்தார்

1989-ல் 'பௌஜி' (Fauji) என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமான ஷாருக்கான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 'பாலிவுட் கிங்' மற்றும் 'பாட்ஷா' போன்ற மகுடத்துடன் பாலிவுட்டில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். சினிமா மட்டுமல்லாது கிரிக்கெட் தொழிலும் ஈடுபட்டுள்ளார். தனது பாலிவுட் தோழி ஜுஹி சாவ்லாவுடன் இணைந்து கொல்கத்தா நைட் ரடர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார்.

பெண்களுக்கு முன்னுரிமை

பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா ஷாருக்கானின் பண்பு குறித்துப் பேசுகையில், ``பாலிவுட்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஷாருக்கான் ஒற்றை ஆளாக நிகழ்த்தினார். ஷாருக்கான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, கதாநாயகிகள் படியில் ஏறும்போது கைகொடுத்து உதவுவது போன்ற கண்ணியமான செயல்களை எந்த ஒரு நாயகனும் செய்ததை தான் பார்த்ததில்லை.

ஆனால் பல ஆண்டுகளாக ஷாருக்கான் இதைத் தொடர்ந்து செய்து வந்ததால், இன்று அது திரைத்துறையில் ஒரு சாதாரணமான, அதே சமயம் போற்றத்தக்க நடைமுறையாக மாறியுள்ளது. 2013-ஆம் ஆண்டிலிருந்து தனது படங்களின் டைட்டில் கார்டில் (Credits), தனது பெயருக்கு முன்பாகவே கதாநாயகிகளின் பெயரை இடம்பெறச் செய்யும் வழக்கத்தை ஷாருக்கான் கொண்டு வந்தார். இது திரைத்துறையில் நிலவும் போக்கை மாற்றியது''என்று குறிப்பிட்டார். 

நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

நடிகர் சல்மான் கான் தந்தையும், பாலிவுட் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் நேற்று காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையை சோதித்த டாக்ட... மேலும் பார்க்க

Taapsee Pannu: `மோடி தான் பிடித்த அரசியல் தலைவர்; ஏனென்றால்...' - வைரலாகும் டாப்ஸி பண்ணுவின் வீடியோ

பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அஸி' (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொல... மேலும் பார்க்க

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காதலர் தினப் பரிசு!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான அவரது கணவரை வெளியில் கொண்டு வர உதவுவதாகக் கூறி ரூ.200 கோடி வாங்கி மோசடி செய்த வழக்கு, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷனிட... மேலும் பார்க்க

Akshay Kumar: "நான் அவரை அறைந்த பிறகு என் கரியரே முடிந்துவிட்டது என நினைத்தேன்" - அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடைசியாக 'ஜாலி எல்.எல்.பி 3' படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படமான 'பூத் பங்களா' திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. Akshay Kumarதற... மேலும் பார்க்க

45 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்?

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், 'அர்மான் திரைப்படத்தின் பாடலான 'ரம்பா ஹோ' பாடலுக்கு புடவையில், மிக நேர்த்தியான உடல் மொழியில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்ஆகி வருகிறது. யார் இவர் என்று சமூ... மேலும் பார்க்க

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி!

‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பின்னணி பாடகி ஜாஸ்மின் சாண்டல்ஸ், மேடையிலேயே பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இந்த சம்பவத்தின் பு... மேலும் பார்க்க