செய்திகள் :

Kara: 'அவர் வேண்டாம்னு சொல்வார்'- நியூமராலஜிபடி தனுஷூக்கு தயாரிப்பாளர் கொடுத்த 'கலை அசுரன்' பட்டம்

post image

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 54-வது படமான ‘கர’ (Kara) ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் இப்படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.

கர படத்தில்...
கர படத்தில்...

ஜி.வி. பிரகாஷ் இசையில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ஐசரி கணேஷ், "எந்த விஷயங்களைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது எனத் தெளிவாகச் செய்யக்கூடிய ஆள் தனுஷ் சார்தான். அவருடைய வேலையை அவர் செய்துகொண்டிருக்கிறார்.

இருந்தாலும், நாம் அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலமாக நிறைய பேருக்குப் பட்டம் தந்துகொண்டிருக்கிறேன். தனுஷ் சாருக்கு யாரும் இதுவரைக்கும் எந்தப் பட்டமும் கொடுக்கவில்லை.

நாம் அனைவரும் இணைந்து அவருக்குப் பட்டம் கொடுத்தால், நன்றாக இருக்கும். அவர் வேண்டாம் எனச் சொல்கிறார். ஆனால், நாம் அவருக்குக் கொடுப்போம்" என்றவர், தனுஷிற்குக் 'கலை அசுரன்' எனத் தலைப்பு வைக்கப்பட்ட காணொளியை ஒளிபரப்பிக் காண்பித்திருக்கிறார்.

Producer Ishari K Ganesh
Producer Ishari K Ganesh

மேலும், "நானும் என்னுடைய குழுவினரும், யார் யாருக்கு என்னென்ன தலைப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்தத் தலைப்பு யாருக்கும் இதுவரை கொடுக்கப்படவில்லை.

இந்தப் பட்டத்திற்கு மிகப் பொருத்தமானவர் தனுஷ்தான். நியூமராலஜி படிப் பார்த்தால், மொத்தமாக 1 என்ற எண் வந்தது. அவர் சினிமாவில் நம்பர் 1-ஆக வர வேண்டும் என்பதுதான் நம் அனைவருடைய ஆசை" எனத் தெரிவித்தார்.

'அருவிப்போல் அன்பைத் தருவாளே' - இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி!

'ராஜா ராணி' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து, 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என விஜய்யை வைத்து மூன்று ஹிட் படைப்புகளைக் கொடுத்தவர் பாலிவுட்டுக்குள் என்ட்ரி தந்தார். அ... மேலும் பார்க்க

Kara: "நாங்கெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா?" - மீம்ஸுக்கு தனுஷ் சொன்ன பதில்!

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 54-வது படமான ‘கர’ (Kara) ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் இப்படம் குறித்து நெகிழ்ச்ச... மேலும் பார்க்க

விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு: `விஜய் - சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்!' - நீதிமன்றம்

1999 ஆம் ஆண்டு விஜய் - சங்கீதா இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் 27 ஆண்டுகள் கழித்து விஜய் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் கூறி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வி... மேலும் பார்க்க

Kara: "மம்மூட்டி சார் எனக்கு கதை இருக்கான்னு கேட்டார்!" - 'கர' இயக்குநர் விக்னேஷ் ராஜா

'போர் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'கர' திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்த... மேலும் பார்க்க

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" - மதன் கார்க்கி| வரித்துணையே 19

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணைய... மேலும் பார்க்க

Mrunal Thakur: "இது வெறும் சடங்கு மட்டுமல்ல; இதுவே வளமான முதலீடு" - நடிகை மிருணாள் தாகூர்

அக்‌ஷய திருதியை முன்னிட்டு மக்கள் பலரும் புதிதான தங்க நகைகளை வாங்கிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். மிருணாள் தாக்கூர் | Mrunal Thakurஇந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் இந்த நாளைத் தனது தனிப்பட்ட வள... மேலும் பார்க்க