செய்திகள் :

Dhoni: தோனி எப்போது களமிறங்குவார்? - சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்

post image

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தோனி உடல்நலம் குறித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், " தோனி காயத்தில் இருந்து முன்னேறி வருகிறார்.

தோனி
தோனி

வலைப்பயிற்சியில் அவர் பேட்டிங் செய்வதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால், பேட்டிங்கை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் ஒரு பினிஷராக அவர் களமிறங்கும் போது, 1 அல்லது 2 ரன்களை மிக வேகமாக ஓடி எடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கும்.

தற்போது விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவதில் தான் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். வேகமாக ஓடுவதில் அவருக்கு இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை.

மைக்கேல் ஹஸ்ஸி
மைக்கேல் ஹஸ்ஸி

அவர் அந்த நம்பிக்கையைப் பெற்ற பிறகே ஆடும் லெவனில் இணைவார். ரசிகர்களைப் போலவே நானும் அவரது வருகைக்காகக் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

PBKS Vs LSG: 'எல்லாரும் அவங்க ஸ்டைல்ல ஆடுறாங்க, அதுதான் எங்களுக்குத் தேவை'– ஸ்ரேயஸ் ஐயர்

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 19)ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைதக்க... மேலும் பார்க்க

'எப்படி வீரர்களை அலட்சியமாகக் கையாள முடிகிறது'; காயத்துடன் ஆயுஷ் - CSK நிர்வாகத்தை சாடிய அஷ்வின்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முழங்காலில் கட்டுடன் களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவை காயத்துடனே பேட்டிங், ரன் ஓட வைத்த சிஎஸ்கே நிர்வாகத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் கடுமையாக சாடியிருக்கிறார். ஹை... மேலும் பார்க்க

SRH Vs CSK:`So Close Yet So Far' என்ற ரீதியில் ஒரு வெற்றி வாய்ப்பைத் தாரை வார்த்திருக்கிறது சிஎஸ்கே

இரு அணிகளும் ஒரே புள்ளிகளில் இருந்ததால் சிஎஸ்கே வெற்றி பெறவும் புள்ளிப் பட்டியலில் ஏணி போட்டு மேலே ஏறவும் வாய்ப்பிருக்கிறது என ரசிகர்கள் நினைக்க, "வாய்ப்பில்ல ராஜா" டெம்ப்ளேட்டைக் கொண்டு பாம்பாக ரசிகர... மேலும் பார்க்க

SRH Vs CSK: "நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், ஆனால்!"- வெற்றி குறித்து இஷான் கிஷன்

ஐபில் தொடரின் நேற்றையப் (ஏப்ரல்.18) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்... மேலும் பார்க்க

அனுபவத்தை முறியடிக்கும் வேகம்; ஐபிஎல் 2026-ஐ அதிரவைக்கும் Gen Z நட்சத்திரங்கள் ஒரு பார்வை!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்பது எப்போதும் திறமைகளை அடையாளம் காணும் ஒரு களமாகவே இருந்து வருகிறது. ஆனால், 2026 சீசன் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. கிரிக்க... மேலும் பார்க்க

MI VS PBKS: பறந்து கேட்ச் பிடித்த ஷ்ரேயஸ்; வாயடைத்துப் போன ரோஹித், சூர்யகுமார்; ஷாக் ஆன MI! | வீடியோ

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 போட்டியின்போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷ்ரேயஸ் ஐயர் பிடித்த ஒரு கேட்ச், ஒட்டுமொத்த மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வீரர்களையும் சிலிர்க்க வைத்துள்ளது.குறிப்... மேலும் பார்க்க