திருச்சி: 'இன்று விஜய் பரப்புரை... 27 கட்டுப்பாடுகளுடன் அனுமதி!' எதிர்பார்ப்பில்...
'எப்படி வீரர்களை அலட்சியமாகக் கையாள முடிகிறது'; காயத்துடன் ஆயுஷ் - CSK நிர்வாகத்தை சாடிய அஷ்வின்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முழங்காலில் கட்டுடன் களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவை காயத்துடனே பேட்டிங், ரன் ஓட வைத்த சிஎஸ்கே நிர்வாகத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் கடுமையாக சாடியிருக்கிறார்.
ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல்.18) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இதில் சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணியும், 7-வது இடத்தில் சென்னை அணியும் உள்ளன.
இந்தப் போட்டியின் போது சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரேவை காயத்துடன் விளையாட வைத்ததை முன்னாள் சிஎஸ்கே வீரர் அஷ்வின் கடுமையாக சாடியிருக்கிறார்.
இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஷ்வின், "ஆயுஷ் மாத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே, முழங்காலில் கட்டுடன் தான் வந்தார்.
அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவர் கடந்த போட்டிகளில் ஃபீல்டிங் செய்யவே இல்லை.
வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் அதைத் தொடர்ந்து கண்காணித்து உடனடியாக சரிசெய்யவேண்டும், அதுதான் இன்ஜூரி மேனேஜ்மென்ட்டின் வேலை.

களத்தில் அவர் தடுமாறியபடி இருக்கிறார், உங்களுடைய பிசியோதெரபிஸ்ட்டுகள் வந்து பரிசோதித்திருக்கிறார்கள். அதற்குபிறகும் அவரை விளையாட வைத்து, ரன் ஓடவைக்கிறீர்கள்.
இது பெரிய காயமாக மாறினால், அவராலும் அடுத்த 6 வாரங்களுக்கு விளையாட முடியாது. எப்படி வீரர்களை இவ்வளவு அலட்சியமாகக் கையாள முடிகிறது" என்று சிஎஸ்கே நிர்வாகத்தை சாடியிருக்கிறார்.




















