செய்திகள் :

"மற்ற நாடுகளை அச்சுறுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை" - ட்ரம்பை சாடிய பிரேசில் அதிபர் லூலா

post image

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என பிரேசில் அதிபர் லூலா ட்ரம்பை சாடியிருக்கிறார்.

வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் பிரேசில் அதிபர் லூலாவிற்கும் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கும் நீண்டகாலமாகவே முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரேசில் அதிபர் லூலா
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரேசில் அதிபர் லூலா

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு நாளிதழான 'எல் பெயிஸ்' (El Pais) இதழுக்கு அளித்த பேட்டியில், ட்ரம்ப் மற்ற நாடுகளை மிரட்டும் போக்கைக் கையாளுவதாக லூலா குற்றம் சாட்டியிருக்கிறார். அதில் அவர்,

``ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும்போதும் உலகை அச்சுறுத்தி போர்களை அறிவிக்கும் ஒரு நாட்டின் அதிபர் உடன் நம்மால் வாழ முடியாது.

மக்கள் பட்டினியால் வாடும் வேளையில், உலகம் $2.7 ட்ரில்லியனை ஆயுதங்களுக்காகச் செலவிடுகிறது. பூமியை கார்பன் உமிழ்வில் இருந்து மீட்பது பற்றிப் பேசிக்கொண்டே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாடுகள் மீதும் குண்டுகள் வீசப்படுகின்றன.

பிரேசில் அதிபர் லூலா
பிரேசில் அதிபர் லூலா

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை. உலகத் தலைவர்கள் அனைவரும் அமைதியைப் பேணவும், ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

'10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?'- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார். அந்தப் பரப்புரையில் சுந்தர் சி குறித்து பேசிய பிரகாஷ் ர... மேலும் பார்க்க

வேஷ்டி - சட்டையில் பிரதமர் கோவையில் பிரசாரம் | Photo Album

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல்... மேலும் பார்க்க

எடப்பாடி: "குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு" - சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த அருண் குமாரின் வேட்புமனு தள்ளுபடியானது. பின்னணி குறித்து பல்வேறு சர்ச்சை தகவல்கள் வெளியாகி வருகின்றன. எடப்ப... மேலும் பார்க்க

நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: மு.க. ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அப்போது அவர் பேசியது.இந்தியாவில் அரசியல் திருப்பத்தை ஏ... மேலும் பார்க்க

BJP: இன்று ஈரோடு வரும் அமித்ஷா, பயணத் திட்டம் என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. கொளுத்தும் கோடை வெப்பத்தையும் தாண்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்க... மேலும் பார்க்க