செய்திகள் :

'10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?'- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்

post image

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.

அந்தப் பரப்புரையில் சுந்தர் சி குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், "வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்தீர்கள்.

எந்த அரசியல் பிரச்னைகளுக்கோ அல்லது மதுரை மக்களுக்காகவோ குரல் கொடுக்காமல், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென வந்துவிட்டால் மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?

சுந்தர் சி
சுந்தர் சி

புதிய நீதிக்கட்சியில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதன் கொள்கை என்ன?. சினிமாவில் இயக்குநர் ஆவதற்கு எத்தனை விஷயங்களை கஷ்டப்பட்டு கற்றிருப்பீர்கள்.

ஆனால், எம்.எல்.ஏவாக மட்டும் உடனே ஆகிவிடுவீர்களா?. உங்கள் மனைவி 10 வருடங்களாக அரசியல் செய்து கேள்விகளை கேட்கிறார். அவருக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என யோசிக்க மாட்டீர்களா?

இந்த சீரழிவை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பி.டி.ஆரின் அறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் இந்தியா முழுவதுமே பார்க்கிறது. அவர் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்து நேரடியாக அமைச்சர் ஆகவில்லை, பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

மாற்றம் முன்னேற்றத்துக்கான மாற்றமாக இருக்க வேண்டும், அது ஏமாற்றமாகிவிடக் கூடாது. இது வெறும் தேர்தலல்ல. ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும், தன்மானத்திற்கும் சுய ஆட்சிக்கும் நடக்கும் தேர்தல். மதுரை வீரமண் என்று சொல்வதைச் செய்து காட்டுங்கள்" என்று பேசியிருக்கிறார்.

தமிழகம் சந்தித்த தொங்கு சட்டசபைகள், விஜயகாந்த் வழியில் 'மைனாரிட்டி' ஆட்சிக்கு பாதை போடுகிறாரா விஜய்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்கள்தான் இருப்பதால் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன அரசியல் கட்சிகள்.தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளப் போவது எந்தக் கட்சி? யார் முதல்... மேலும் பார்க்க

”ராகுல்காந்தி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை”- நெகிழ்ந்த பட்டுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். இதற்காக பல மாவட்டங்களைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

வேஷ்டி - சட்டையில் பிரதமர் கோவையில் பிரசாரம் | Photo Album

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல்... மேலும் பார்க்க

"மற்ற நாடுகளை அச்சுறுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை" - ட்ரம்பை சாடிய பிரேசில் அதிபர் லூலா

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என பிரேசில் அதிபர் லூலா ட்ரம்பை சாடியிருக்கிறார். வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் பிரேசில் அதிபர் லூலாவ... மேலும் பார்க்க

எடப்பாடி: "குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு" - சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த அருண் குமாரின் வேட்புமனு தள்ளுபடியானது. பின்னணி குறித்து பல்வேறு சர்ச்சை தகவல்கள் வெளியாகி வருகின்றன. எடப்ப... மேலும் பார்க்க

நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: மு.க. ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அப்போது அவர் பேசியது.இந்தியாவில் அரசியல் திருப்பத்தை ஏ... மேலும் பார்க்க