செய்திகள் :

ஜோலார்பேட்டையில் ஜொலிக்கும் தி.மு.க வேட்பாளர் - களத்தில் முந்தும் கவிதா தண்டபாணி

post image

“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்கும். எங்கள் தொகுதியில் தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவைப் பார்த்தாலே அது தெரியும்” என்கிறார் ஜோலார்பேட்டை தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கவிதா தண்டபாணி. பிரசாரக் களத்தில் உற்சாகமாக வளம்வருபவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

ஜோலார்பேட்டை தொகுதிக்கு நீங்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்னென்ன?

"மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்துக் கொடுப்போம். மாம்பழக் கூழ் தொழிற்சாலையும், அகர்பத்தி கொள்முதல் நிலையத்தையும் நிர்மானிப்போம். விவசாயத்தை வளப்படுத்த தென்பெண்ணை ஆற்றிலிருந்து செட்டேரி அணைக்குத் தண்ணீர் வழிதடம் ஏற்படுத்தி, விவசாய பாசனத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்படும். ஏரி குளங்கள் முழுமையாகத் தூர்வாரப்படும். ஜோலார்பேட்டை ஏரியை தூய்மைப்படுத்தி, பூங்கா மற்றும் படகு இல்லம் அமைக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது. ஏலகிரி மலையை தரம் உயர்த்தி கூடுதல் அரசு பூங்காகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் அமைத்துத் தரப்படும்."

ஜோலார்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக எதைப் பார்க்கிறீர்கள்?

“இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக இந்த தொகுதியில் சிப்காட் அமைத்து தரவேண்டும் என்கிற கோரிக்கை நீண்டநாளாக உள்ளது. செட்டேரி அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் நினைக்கிறார்கள்.

கவிதா தண்டபாணி

பீடி சுற்றும் தொழிலார்களுக்கு அரசு சலுகைகள் மானியங்கள் வழங்கவேண்டும். ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும். தொகுதியில் 24/7 கால்நடை மருத்துவமனை அமைகப்பட வேண்டும்... இந்தக் கோரிக்கைகள் எல்லாம் மக்களிடமிருந்து எங்களுக்கு வந்துள்ளது."

தி.மு.க ஆட்சியில் இந்த தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாமே?

“ஆமாம்! ரூ.29.65 கோடி மதிப்பில் ரயில்வே சாலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.20.82 கோடி மதிப்பில் பச்சூர் சாலை மேம்பால கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. பச்சூர் பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைப் பெற்று ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு தற்போது மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பொன்னேரியில் ரூ.650 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டடம் கட்டும் பணிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.”

உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

“மக்களின் பேராதரவுடன் இந்த தொகுதியில் மாபெரும் வெற்றியை ஈட்டுவோம். மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கான விடியல் பேருந்து, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் எல்லாம் மக்களிடம் பெரும் ஆதரவை எங்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளன. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையே முதல்வர் சொன்னதுபோல், ஹீரோ-ஹீரோயினாக இருப்பதால் எங்கள் வெற்றி எளிது” என்கிறார்.

`பினாமிகளை வைத்துத் தமிழகத்தை ஆள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்!' - குளச்சலில் கடுகடுத்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குளச்சல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்க... மேலும் பார்க்க

`ராயபுரத்தால் நான்... ராயபுரத்துக்காக நான்!' - `இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை’ டி.ஜெயக்குமார்

ராயபுரத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜெயக்குமார் ஏழாவது முறையாகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். "கடந்த ஐந்து முறையைக் காட்டிலும், வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, ஆறாவது ம... மேலும் பார்க்க

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என... மேலும் பார்க்க

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் - சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிச... மேலும் பார்க்க

தி.நகர் தொகுதிக்குத் திருப்பம் தரும் 6 அம்ச திட்டம்! பட்டியலிடும் ராஜா அன்பழகன்

"நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்... மேலும் பார்க்க

ஆவடி தொகுதி: “ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ - அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆவடி தொகுதியின் தி.மு.க வேட்பாளரும் அமைச்சர் சா.மு.நாசரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆவடி தொகுதி வேட்பாளரு... மேலும் பார்க்க