செய்திகள் :

`ராயபுரத்தால் நான்... ராயபுரத்துக்காக நான்!' - `இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை’ டி.ஜெயக்குமார்

post image

ராயபுரத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜெயக்குமார் ஏழாவது முறையாகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். "கடந்த ஐந்து முறையைக் காட்டிலும், வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, ஆறாவது முறையாக இமாலய வெற்றிபெறுவார்.

ராயபுரம் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும், அவ்வளவு ஏன்... மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவுகூட அண்ணன் ஜெயக்குமாருக்கே இருக்கிறது" என்கிறார்கள் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள்.

ராயபுரம் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்துகொண்டிருந்த அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ராயபுரம் மக்கள் உங்களுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்?

``ராயபுரம் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த சமயத்தில் தொகுதியின் வளர்ச்சியை உறுதிசெய்தவன் நான். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவந்த போஜராஜன் மேம்பாலத்தை ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது தி.மு.க. கிழக்கு கல்லறை சாலை, மூலக்கொத்தளம் குடியிருப்பு இவையெல்லாம் நான் கொண்டுவந்தவைதான்.

டி.ஜெயக்குமார்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தொடங்கி வீடற்ற அனைவருக்கும் புதிய வீடுகள் கிடைக்கச் செய்வேன்; மீனவர்கள் நலனை உறுதிசெய்வேன்; தரமான சாலைகள், சுத்தமான குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். தொகுதியில் அதிகரித்திருக்கும் போதைப்பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிப்பேன்."

தொகுதியில் அடர்த்தியாக இருக்கும் இஸ்லாமியர்கள் வாய்ப்பு உங்களுக்குப் பின்னடைவு என்கிறார்களே?

``அப்படி ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், தொகுதியில் இருக்கும் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களுமே வெளிப்படையாகவே எனக்கு ஆதரவு தெரிவிப்பதைச் செல்லும் இடங்களிலெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ராயபுரத்தின், அதிலும் இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை நான். என்மீது சாதி, மதச் சாயம் பூச நினைக்கும் அனைவரின் முகத்திலும் ராயபுரம் சிறுபான்மையின மக்கள் கரியைப் பூசுவதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள்."

டி.ஜெயக்குமார்

இந்த முறை உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

``இது எனது சொந்தத் தொகுதி. இங்கே இருக்கும் மக்கள் அனைவரும் என் சொந்த பந்தங்கள். எதிர்பாராதவிதமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியைத் தழுவியிருந்தாலும், என்னைவிட என் ராயபுரம் மக்களே 'உங்களைப் போய் தோக்கடிச்சுட்டோமே...' என்று அதிக வருத்தமடைந்தார்கள். தேர்தலுக்காக மட்டுமே நான் தொகுதிக்குச் செல்லவில்லை. தோல்வியே அடைந்திருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளும், `ராயபுரத்தால் நான், ராயபுரத்துக்காகவே நான்...’ என்று தொகுதியில் மக்களுடன் மக்களாகவே இருந்திருக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் பல துயரங்களைப் பார்த்துவிட்டார்கள். இனி ஒருபோதும் ராயபுரத்தில், வேறு யாருக்கும் வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கூடவே, மக்கள் வரவேற்பைப் பார்க்கும்போது எதிர் வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைப்பதே சந்தேகம்தான்" என்கிறார் குதூகலத்துடன்!

`பினாமிகளை வைத்துத் தமிழகத்தை ஆள நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்!' - குளச்சலில் கடுகடுத்த ராகுல் காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குளச்சல் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்க... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டையில் ஜொலிக்கும் தி.மு.க வேட்பாளர் - களத்தில் முந்தும் கவிதா தண்டபாணி

“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்கும். எங்கள் தொகுதியில் தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவைப் பார்த்தா... மேலும் பார்க்க

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என... மேலும் பார்க்க

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் - சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிச... மேலும் பார்க்க

தி.நகர் தொகுதிக்குத் திருப்பம் தரும் 6 அம்ச திட்டம்! பட்டியலிடும் ராஜா அன்பழகன்

"நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்... மேலும் பார்க்க

ஆவடி தொகுதி: “ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ - அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆவடி தொகுதியின் தி.மு.க வேட்பாளரும் அமைச்சர் சா.மு.நாசரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆவடி தொகுதி வேட்பாளரு... மேலும் பார்க்க