செய்திகள் :

Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் - விவாதிக்கும் நெட்டிசன்கள்!

post image

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். சமீபத்தில் அவர் திருமண வாழ்க்கை குறித்து மனம்திறந்து பேசியது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றது. இந்த நிலையில், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில் திரைத்துறையில் நிலவும் 'காஸ்டிங் கௌச்' (பாலியல் சுரண்டல்) குறித்து கேட்கப்பட்டது.

Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி

அதற்கு அவர், ``உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் நடப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். எனக்கு இது போன்ற அனுபவம் இதுவரை ஏற்பட்டதில்லை என்பதால் இப்படிச் சொல்கிறேன்" என்றார். தொகுப்பாளர், ``ஒரு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் இளம் வயதிலேயே நுழைந்ததால், பாலியல் சுரண்டலில் இருந்து தப்பித்திருக்கலாம். உங்களுக்கு நடக்காவிட்டாலும், திரையுலகில் இது போன்ற விஷயங்கள் இருக்கத்தானே செய்கிறது?" என்று கேட்டபோது, ``எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது." என பதிலளித்தார்.

ஹன்சிகாவின் இந்த பதில் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. சமூக ஊடகப் பயனர்கள் பலரும் ஹன்சிகாவின் கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர். ஒரு பயனர், ``எனக்குச் சர்க்கரை நோய் இல்லை என்பதால், அந்த நோயே உலகில் இல்லை என்று சொல்வதைப் போல இது இருக்கிறது" என்றார். மற்றொருவர், ``பாதுகாப்பான சூழலில் வளர்ந்த ஹன்சிகா, மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாகப் பேசுகிறார்" எனப் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், ``உண்மையாக உழைப்பவர்களுக்கு இது நடக்காது என்று சொல்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் உழைக்கத் தயாராக இல்லை என்று அவர் கூறுகிறாரா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்" - மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார். லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட... மேலும் பார்க்க

சுகேஷின் ரூ.200 கோடி மோசடி வழக்கு; அப்ரூவராக மாற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விருப்பம்

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் சிங் சிறையில் இருந்தபோது அவரை வெளியில் கொண்டு வருவதாக தொழிலதிபர் மனைவியிடம் கூறி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திர சேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சிற... மேலும் பார்க்க

'சிராக் பஸ்வானுடன் காதல்?' - கங்கனா ரனாவத்தின் விளக்கம் என்ன?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்று, நாடாளுமன்றம் சென்றுவிட்டார். ஆனால் சிறிது நாட்களில் தனக்கு அரசியல் பிடிக்கவில்லை என்று பேட்டியளிக்க ஆரம்பித்தார். இப்போது நாடா... மேலும் பார்க்க

"அப்போது என் தந்தை மதுவுக்கு அடிமைப்பட்டிருந்தார்; அவரின் மறைவுதான் எங்களை சேர்த்தது" - பாபி தியோல்

மறைந்த நடிகர் தர்மேந்திராவின் மகனும், பாலிவுட் நடிகருமான பாபி தியோல், சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தந்தை தர்மேந்திராவின் மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறா... மேலும் பார்க்க

"தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 'ராமாயணம்' கற்றுக்கொடுக்கிறது!" - 'ராமாயணா' படம் பற்றி யஷ்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. Ramayana Movieஇந்நிலையில், லாஸ் வேகா... மேலும் பார்க்க

"தாவூத் இப்ராகிமால்தான் நான் பிழைப்பு நடத்துகிறேன்" - இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது என்ன?

பிரபல பாலிவுட் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மாபியாவை மையப்படுத்தி பல படங்களை இயக்கி இருக்கிறார். ராம்கோபால் வர்மா எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர். தற்போது அவர் பேசி இருக்கும் கருத்துக்கள... மேலும் பார்க்க