செய்திகள் :

’டபுள் என்ஜின் மாநிலங்களின் வளர்ச்சி தமிழ்நாட்டில் இல்லை’ – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

post image

கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில்  தொழில் முனைவோர் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, கோவை மாவட்டத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, “நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘டபுள் என்ஜின்’ அரசுகள் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி தானாக நடைபெறுகிறது. இதற்கு மாறாக தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லை.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக தி.மு.க மற்றும் காங்கிரஸ் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு பெண்களுக்கு எதிரான துரோகம். அனைத்து மாநிலங்களிலும் 50 சதவிகிதம் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

அதில் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே. இது தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்வி அல்ல, நாட்டின் பெண்களின் தோல்வி. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை தி.மு.க மற்றும் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் கிளப்புகின்றன. வளர்ச்சி இல்லாமல் நலத்திட்டங்கள் மட்டும் நீடிக்க முடியாது. ஆந்திராவில் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளை இணைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் காவிரிக்கும் நீர் வழங்கும் வாய்ப்பு உருவாகும். கங்கா - காவேரி இணைப்பு, பிரதமர் மோடி ஆட்சி தொடரும் பட்சத்தில் நடக்கும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு மிக முக்கியம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்து அரசுகளும் செயல்பட வேண்டும்” என்றார்.

`கோவை தெற்கு தொகுதி தேர்தல் ரத்தா?' - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜியும், அ.தி.மு.க. சார்பில் அம்மன் அர்ச்சுணனும் போட்டியிடுகின்றனர். தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அ.தி.மு.க-வினர் ஆயிரம் ரூபாயும் ... மேலும் பார்க்க

‘கோவை தெற்கில் தி.மு.க வாக்காளர்களுக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்ததா?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க 2.0 ஆட்சி அமைந்த உடன் ஒரு லட்சம் கோடி ரூபாயில் கோவை மாவட... மேலும் பார்க்க

தமிழ்நாடு தேர்தல்: இன்று 6 மணியோடு எல்லாம் 'க்ளோஸ்'- விதிப்படி எதற்கெல்லாம் 'நோ' - மீறினால்?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் கடைசி மணிநேர அனலில் இருக்கிறது.இன்று மாலை 6 மணிக்கு மேல், 'நோ' தேர்தல் பரப்புரை, 'நோ' தேர்தல் பிரசாரம், 'நோ' வாக்கு சேகரிப்பு என தேர்தல் சம்பந்தமான அனைத்திற்கும் 'நோ'. ... மேலும் பார்க்க

கோவை தெற்கு: "23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை மக்கள் கிழிப்பார்கள்" - அண்ணாமலை காட்டம்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதி நாள் வாக்கு சேகரிப்பு வாகனப் பேரணி சிவசக்தி காலனி பகுதியில் துவங்கியது.இப்பேரணியை பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்க... மேலும் பார்க்க

நெல்லை: பாஜக வேட்பாளரை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய 'Road Show'! | Photo Album

நெல்லை: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 'ரோடு ஷோ' தேர்தல் பிரச்சாரம் புகைப்படங்கள்! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: மு.க. ஸ்டாலின் மேலும் பார்க்க

திருநெல்வேலி: அனல் தெறிக்கப் பேசிய வைகோ; தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் புகைப்படங்கள் | Photo Album

திருநெல்வேலி: அனல் தெறிக்க பேசிய வைகோ! தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் புகைப்படங்கள்.!``மோடியும் அமித் ஷாவும் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் பாஜக வெற்றி பெற முடியாது" - வைகோ மேலும் பார்க்க