தமிழகம் சந்தித்த தொங்கு சட்டசபைகள், விஜயகாந்த் வழியில் 'மைனாரிட்டி' ஆட்சிக்கு பா...
"தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை 'ராமாயணம்' கற்றுக்கொடுக்கிறது!" - 'ராமாயணா' படம் பற்றி யஷ்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இந்நிலையில், லாஸ் வேகாஸில் நடைபெறும் 'சினிமாகான் 2026' (CinemaCon) நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் யஷ், அவர் நடிக்கும் ராவணன் கதாபாத்திரத்தின் ஆடை மற்றும் அவருடைய காட்சிகள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அங்கு அவர்,"'ராமாயணா' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், முதல் பாகத்தில் ரன்பீர் கபூரும் நானும் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவுமே கிடையாது.
ராவணனாக எனக்கு ஒரு தனி ராஜ்ஜியமும், ராமராக ரன்பீருக்கு ஒரு தனி ராஜ்ஜியமும் காட்டப்படுகிறது. இரண்டாம் பாகத்தில்தான் எங்களது நேருக்கு நேர் மோதல்கள் தொடங்கும். இயக்குநர்களின் பார்வையை முழுமையாக நம்பி நான் பணியாற்றி வருகிறேன்.
ஒரு நடிகராக எனது பார்வையை மட்டும் திணிக்காமல், இயக்குநரின் கனவுக்கு உயிர் கொடுக்க முயன்றுள்ளேன். அதேசமயம், ராவணன் கதாபாத்திரத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் கவனம் செலுத்தி, எனது சொந்தப் பங்களிப்பையும் கொடுத்திருக்கிறேன்.
ராமாயணம் என்பது வெறும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான போர் மட்டுமல்ல. ஒருவன் பல வழிகளில் சிறந்தவனாக இருந்தாலும், அவன் செய்யும் தவறுகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதையும் அது கற்றுக்கொடுக்கிறது.
நாம் அனைவரும் சிறுவயது முதலே இந்தக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். இது நமது கலாசார நம்பிக்கையோடு கலந்த ஒன்று." என்றவர், "ராவணன் கதாபாத்திரத்தின் ஆடை அலங்காரம் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் கருப்பு நிறத்திலான கவசங்கள், கிரீடம் என ஒரு பேரரசுக்கான கம்பீரத்துடன் அந்த லுக் இருக்கும். ரன்பீர் கபூரை நான் சில முறை நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன். அவர் ஓர் அற்புதமான நடிகர். எங்களது இருவருக்குமான புரிதல் மற்றும் மரியாதை மிகவும் சிறப்பாக உள்ளது." எனக் கூறியிருக்கிறார்.





.jpg)














