செய்திகள் :

'அருவிப்போல் அன்பைத் தருவாளே' - இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி!

post image

'ராஜா ராணி' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து, 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என விஜய்யை வைத்து மூன்று ஹிட் படைப்புகளைக் கொடுத்தவர் பாலிவுட்டுக்குள் என்ட்ரி தந்தார்.

அங்கு ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.

விஜய் - அட்லி - ஷாருக் கான்

தற்போது இயக்குநர் அட்லீ, இப்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் 'ராக்கா' படத்தின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, இப்படத்தின் டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டிருந்தது.

இப்படத்தில் தீபிகா படுகோனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தைச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்போது இயக்குநர் அட்லீ - பிரியா அட்லீ தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தத் தம்பதியினருக்கு முதலாவதாக ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தைக்கு 'மீர்' எனவும் இவர்கள் பெயர் சூட்டினர். தற்போது இந்தத் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாகப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

Atlee & Priya Atlee
Atlee & Priya Atlee

இந்தத் தகவலை அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி, அவர்களுடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது, பெண் குழந்தை பிறந்திருப்பதற்குத் திரைத்துறையினர், ரசிகர்கள் எனப் பலரும், இந்த தம்பதியினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

Kara: 'அவர் வேண்டாம்னு சொல்வார்'- நியூமராலஜிபடி தனுஷூக்கு தயாரிப்பாளர் கொடுத்த 'கலை அசுரன்' பட்டம்

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 54-வது படமான ‘கர’ (Kara) ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் இப்படம் குறித்து நெகிழ்ச்ச... மேலும் பார்க்க

Kara: "நாங்கெல்லாம் போயஸ் கார்டன்ல வீடு வாங்கக்கூடாதா?" - மீம்ஸுக்கு தனுஷ் சொன்ன பதில்!

நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நடிகர் தனுஷின் 54-வது படமான ‘கர’ (Kara) ப்ரீ-ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் இப்படம் குறித்து நெகிழ்ச்ச... மேலும் பார்க்க

விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு: `விஜய் - சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்!' - நீதிமன்றம்

1999 ஆம் ஆண்டு விஜய் - சங்கீதா இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் 27 ஆண்டுகள் கழித்து விஜய் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் கூறி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வி... மேலும் பார்க்க

Kara: "மம்மூட்டி சார் எனக்கு கதை இருக்கான்னு கேட்டார்!" - 'கர' இயக்குநர் விக்னேஷ் ராஜா

'போர் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'கர' திரைப்படம் இம்மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்த... மேலும் பார்க்க

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" - மதன் கார்க்கி| வரித்துணையே 19

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணைய... மேலும் பார்க்க

Mrunal Thakur: "இது வெறும் சடங்கு மட்டுமல்ல; இதுவே வளமான முதலீடு" - நடிகை மிருணாள் தாகூர்

அக்‌ஷய திருதியை முன்னிட்டு மக்கள் பலரும் புதிதான தங்க நகைகளை வாங்கிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். மிருணாள் தாக்கூர் | Mrunal Thakurஇந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் இந்த நாளைத் தனது தனிப்பட்ட வள... மேலும் பார்க்க