செய்திகள் :

"எல்லாருக்கும் சமமான சந்தை வேண்டும்; இல்லையென்றால், மிகப்பெரிய இழப்பைச் சந்தியுங்கள்" - ஈரான்

post image

ஈரான் போர் எதற்கு தொடங்கியது என்று மறந்து, இப்போது 'ஹார்முஸ் ஜலசந்தி'யை மையமாக வைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போர் தொடங்கியதில் இருந்து மூடப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி, இப்போது திறப்பு... மூடல்... எச்சரிக்கை... ரிப்பீட்டு என்று சென்று கொண்டிருக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் புதிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளது.

அது என்ன?

ஈரானின் துணை அதிபர் ஆரிஃப், "ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு என்பது இலவசம் அல்ல. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். அதனால், மற்ற நாட்டவர்களின் கப்பல்களுக்கு எங்களின் பாதுகாப்பு இலவசமாகக் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.

ஆரிஃப் பதிவு
ஆரிஃப் பதிவு

ஒன்று, அனைவருக்கும் சுதந்திரமான எண்ணெய் சந்தை இருக்க வேண்டும்... அல்லது அனைவரும் மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

உலகளாவிய எரிபொருள் விலையின் நிலைத்தன்மை என்பது, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட... மற்றும் நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பதிலேயே தங்கியுள்ளது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜோலார்பேட்டையில் ஜொலிக்கும் தி.மு.க வேட்பாளர் - களத்தில் முந்தும் கவிதா தண்டபாணி

“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்கும். எங்கள் தொகுதியில் தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவைப் பார்த்தா... மேலும் பார்க்க

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என... மேலும் பார்க்க

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் - சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிச... மேலும் பார்க்க

தி.நகர் தொகுதிக்குத் திருப்பம் தரும் 6 அம்ச திட்டம்! பட்டியலிடும் ராஜா அன்பழகன்

"நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்... மேலும் பார்க்க

ஆவடி தொகுதி: “ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ - அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆவடி தொகுதியின் தி.மு.க வேட்பாளரும் அமைச்சர் சா.மு.நாசரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆவடி தொகுதி வேட்பாளரு... மேலும் பார்க்க

TOUSKA: எச்சரிக்கையை புறக்கணித்த ஈரான்; விளைவு, கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா - சம்பவத்தின் பின்னணி?

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தற்போது ஈரானின் கப்பல் ஒன்றை அமெரிக்கா பிடித்து வைத்துள்ளது. ட்ரம்ப் பதிவு இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது... மேலும் பார்க்க