'பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்?' - திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது வ...
"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" - நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!
கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் 14 மாதப் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர்.
'இந்தக் கொடூரக் கொலைக்கு பழிவாங்குவோம்' எனக் குறிப்பிட்ட ஈரான், தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருக்கும் பகுதிகள் குறிவைத்து தாக்கப்பட்டது. இதற்கிடையில், 'ஈரான் தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டார்' என ஈரான் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூற்றை முழுமையாக மறுத்த இஸ்ரேல், நெதன்யாகு உரையாற்றுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஈரான், ``இந்த வீடியோவில் நெதன்யாகுவுக்கு 6 விரல் இருப்பது போல காட்சிகள் வருகின்றன. இது ஏஐ வீடியோ" எனக் குறிப்பிட்டது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ``பிரதமர் நெதன்யாகு நலமாக இருக்கிறார். இவை அனைத்தும் முற்றிலும் வதந்திகள்" என விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு பதிலளித்திருக்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை' (IRGC) ``நெதன்யாகு குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி... எங்கள் தலைவரின் குடும்பத்தைச் சிதைத்த அவரை வேட்டையாடாமல் விடமாட்டோம். ஒருவேளை அவர் கொல்லப்படவில்லை என்றால். அவரை தேடி வேட்டையாடுவோம்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஈரானின் இந்த நேரடி கொலை மிரட்டல் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் மேகங்களாகச் சூழ்ந்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.














