செய்திகள் :

IPL 2026: `தலையாகவோ, வாலாகவோ இருக்க நான் சிஎஸ்கேவுக்கு போகலை, அங்க..!' - தோனி குறித்து சஞ்சு சாம்சன்

post image

2026 ஆம் ஆண்டிற்கான ஐபில் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு எதிர்கொள்ள இருக்கிறது.

 சஞ்சு சாம்சன் - ஜடேஜா
சஞ்சு சாம்சன் - ஜடேஜா

ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். காரணம் சிஎஸ்கே அணியில் இருந்த ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார்.

இந்நிலையில் PTI- க்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சு சாம்சன், தோனி குறித்து பேசியிருக்கிறார்.

தோனி குறித்து பேசிய சாம்சன், "நான் தோனி பாயுடன் போனில் பேசியிருக்கிறேன். தவிர இந்திய அணியின் முகாம்களில் பார்த்திருக்கிறேன்.

அவரோடு ஒரே அணியில் விளையாடுவது இதுவே முதன்முறை. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

ஐபிஎல் நடைபெறும் இரண்டு மாதங்கள் ஒரே டிரெஸிங் ரூமில் இருப்பது, அவர் எப்படி போட்டிகளுக்குத் தயாராகிறார் என்பதைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

 சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

தலையாக இருப்பதற்கோ, வாலாக இருப்பதற்கோ நான் சிஎஸ்கே-விற்கு செல்லவில்லை. அங்கு ஒரே தல-தான் அது சிஎஸ்கே தோனிதான். தோனியும், சிஎஸ்கே ரசிகர்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்" என்று நம்பிக்கையாகப் பேசியிருக்கிறார்.

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர... மேலும் பார்க்க

BCCI: 'பெருமையாக இருக்கிறது; சிறுவனாக 15 வயதில் என்.!' - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டிராவிட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) 2026-ம் ஆண்டிற்கான நமன் விருது விழா நேற்று( மார்ச்.15) நடைபெற்றிருக்கிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற... மேலும் பார்க்க

Shivam Dube: `கோப்பை வென்ற கையோடு ரயிலில் பயணம்: `அது அந்த கிரிக்கெட் வீரரா?' - TTR கேட்ட கேள்வி

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. கோப்பையைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணியில், வீரா்கள... மேலும் பார்க்க

Gambhir: "வீரர்களைக் கையாண்ட விதத்தில் கம்பீர் தவறு செய்திருக்கிறார்" - சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தாலும், அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்திருக்கிறார். குறிப்பாக சஞ்சு சாம்சன் கையாளப்பட்ட வித... மேலும் பார்க்க

T20 WC: `இந்திய அணி ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டது' பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்

டி20 உலகக்கோப்பையை 3-வது முறையாக வென்றிருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்து பேசியிருக்கிறார். விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோயப் அக்தர், "இது தெரு ஒன்றி... மேலும் பார்க்க