செய்திகள் :

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து களம் இறங்கப் போவது யார்? பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ராவை நிறுத்த ஆலோசனை

post image

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், போடி தொகுதியில் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2001 - 2006 ஆம் ஆண்டு தேர்தல்களில் பெரியகுளம் தொகுதியிலும் 2011, 2016, 2021 ஆண்டு தேர்தல் காலங்களில் போடி தொகுதியிலும் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்த 5 - தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார்.

பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா
பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ளார். திமுக வெற்றிக்காக தென்மாவட்டங்களில் அவர் பிரசாரப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.

விரைவில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் போடி தொகுதியில் அவர் போட்டியிட திமுக தலைமைக் கழகத்திடம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

போடி தொகுதியில் அவர் மீண்டும் களம் இறங்கினால், அவரை எதிர்த்து யாரை நிறுத்துவது என்ற ஆலோசனையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக அ.தி.மு.க பாஜக கூட்டணியில் போடி தொகுதியில் யார் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து வலிமையான வேட்பாளரை நிறுத்த அ.தி.மு.க.வினர் ஆலோசித்து வருகின்றனர். கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதாவும் போடி தொகுதியை கேட்டு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த தொகுதியில் `நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன'த் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறக்கப்படலாம் என்ற பேச்சு போடி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா அதிமுக-வுடன் கூட்டணி வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எனவே போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா களம் இறங்க அதிமுக, பாஜக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல நமது மக்கள் முன்னேற்றக் கழகம், த வெ.க உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும்அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்தாலும், ஜெகநாத் மிஸ்ராவே போடி தொகுதியில் களமிறங்கலாம் என்று பேசப்படுகிறது.

பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா
பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா

எனவே இந்த தேர்தலின் போது போடி தொகுதி பரபரப்பான அரசியல் களமாக இருக்கப் போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை

கன்னியாகுமரி: "மானம் உள்ளவர்கள் திமுக-வுக்கு ஓட்டு போடலாமா?" - ஆர்ப்பாட்டத்தில் கொந்தளித்த பொன்னார்!

தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதை புழக்கத்தால் இளைஞர்கள் இளம்பெண்கள் வாழ்க்கை சீரழிவை கட... மேலும் பார்க்க

`யம்மா... தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?'- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதை கண்டித்தும் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நெல்லை சந்திப்... மேலும் பார்க்க

எஸ்கேப் ஆகும் முஸ்லிம் லீக்; பிடிகொடுக்காத ஜவாஹிருல்லா! - வாணியம்பாடியை கழற்றிவிடுகிறாரா எ.வ.வேலு?

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி, தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க வசம் இருக்கிறது. கடந்த தேர்தல்களில், `தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்குத் த... மேலும் பார்க்க

`நடக்கக்கூட முடியலை, மாசம் 20 நாள் ஆஸ்பத்திரியில... எதுக்கு பதவி வெறி!' - ஓபிஎஸ்-ஸைச் சாடும் டிடிவி

தஞ்சாவூரில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இணைந்து தமிழ்நாட்டில் நிலவும் பாலியல் கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க தவறியதாக, திமுக அரசைக் கண்டி... மேலும் பார்க்க

மல்லுக்கட்டும் கழகங்கள்; விஜய் குறிவைக்கும் தொகுதியில்.! - திருச்சி மாவட்ட நிலவரம் | முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'முந்துவது யார்?திருச்சி மாவட்டம்மாநிலத்த... மேலும் பார்க்க

`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”என்கிற வரிகளோடு ரஜினி வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பல்வேறு அரசியல் நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்துள்ளது. ஆதவ் அர்ஜூனா கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் ர... மேலும் பார்க்க