செய்திகள் :

"நான் 'ராமாயணா' படத்தில் முதலில் நடிக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன், ஏனென்றால்..!"- ரன்பீர் கபூர்

post image

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராமாயணா’.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.

படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ராமன் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு இன்று (ஏப்ரல்.2) வெளியிட்டிருக்கிறது.

ராமாயணம்
ராமாயணம்

இந்நிலையில் 'ராமாயணா' படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை நிராகரித்ததாகக் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரன்பீர் கபூர், "சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா இந்த கதாபாத்திரத்திற்காக (ராமர்) தன்னை அணுகியபோது, உடனடியாக நான் இதில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டேன்.

நான் இதற்குப் பொருத்தமானவன் அல்ல. என்னால் அந்தப் பாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்க்க முடியாது என்று அவரிடம் கூறினேன். ஆனால், அந்த பயம் விரைவில் நன்றியுணர்வாக மாறியது.

ஏனென்றால், இது போன்ற வாய்ப்புகள் என் வாழ்க்கையில் எனக்கு உண்மையிலேயே தேவைப்பட்டன.

ரன்பீர் கபூர்
ரன்பீர் கபூர்

இந்தக் கதாபாத்திரத்தின் மீதும், ராமாயணக் கதையின் மீதும் எனக்கு அளவற்ற அன்பும், மரியாதையும் உண்டு. ராமர் கதாபாத்திரத்திற்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்து இந்தப் படத்தில் நடித்தேன்" என்று கூறியிருக்கிறார்.

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர் - மீண்டும் பாலிவுட்டில் நயன்தாரா!

சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு 'சிக்கந்தர்' திரைப்படம் வெளிவந்திருந்தது. அத்திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்து வரும் 'மாற்றுபூமி' படத்தின் வேலைகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் இம்மாத ரிலீஸா... மேலும் பார்க்க

SVC63: 'வாரிசு' பட இயக்குநருடன் இணையும் சல்மான் கான் - வெளியான அப்டேட்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவும், இந்தியாவும் மோதிக்கொண்டது தொடர்பாக மாத்ருபூமி என்ற பெயரில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் ஆரம்பத்தில், `பேட்ட... மேலும் பார்க்க

Abhishek Bachchan: "அதைப் புறக்கணிப்பவன் முட்டாள் மட்டுமே!" - பாடமெடுக்கும் அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் தற்போது ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்... மேலும் பார்க்க

`ஆப்ரேஷன் சிந்தூரை மையப்படுத்தியது'- அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்

சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', 'தி வாசின் வார்' உள்ளிட்ட சில படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இப்போது அவருடைய அடுத்த படத்தை இயக்குவதற்கும் தயாராகிவி... மேலும் பார்க்க

Mrunal Thakur: "அதன் பிறகுதான் அனைவரும் என்னை ஏற்றுக்கொண்டார்கள்" - மிருணால் தாகூர்

மிருணால் தாகூர் நடித்திருக்கும் 'டகாய்ட் (Dacoit)' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அவரை ஏற்றுக்கொண்ட விதம் பற்றி இப்படத்திற்கான புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்க... மேலும் பார்க்க

Dhurandhar The Revenge: "ஒரு தவறான கருத்தைச் சரி என்று காட்ட.!" - சாடும் திரைக்கதையாசிரியர்!

துரந்தர் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஆதித்ய தர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரன்வீர்... மேலும் பார்க்க