செய்திகள் :

முதுமைக்கு எண்ட் கார்டு: மரணத்தை வெல்லும் `ஜோம்பி செல்' ஆராய்ச்சி!

post image

மனிதர்களுக்கு வயதாவதை நிறுத்த முடியுமா? பல நூறு ஆண்டுகளாக மனித சமூகம் தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கான விடையை, ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நெருங்கியுள்ளனர். நமது உடலில் ஏற்படும் முதுமைக்கும், நாள்பட்ட நோய்களுக்கும் முக்கியக் காரணமான ஜோம்பி செல்களை (Zombie Cells) அழிக்கும் புதிய வழியை அவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு, Signal Transduction and Targeted Therapy என்ற அதிகாரபூர்வ மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

Zombie Cells
Zombie Cells

ஜோம்பி செல்கள் என்றால் என்ன?

நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. இவை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வயதாகி, தானாகவே அழிந்துவிடும். பின்பு அந்த இடத்தில் புதிய செல்கள் உருவாகும். இதுதான் இயற்கையான சுழற்சி. ஆனால், சில செல்கள் வயதான பின்பும் சாகாமல், அதேநேரம் புதிய செல்களாகவும் மாறாமல் உடலிலேயே தங்கிவிடும். திரைப்படங்களில் வரும் ஜோம்பிகளைப் போல, இவை சாகாத பிணங்களாக உடலுக்குள் உலவும்.

இப்படித் தேங்கும் ஜோம்பி செல்கள் விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருள்களை வெளியிட்டு, அருகில் உள்ள நல்ல செல்களையும் நாசமாக்குகின்றன. இதனால் தான் மனிதர்களுக்கு வயதாகும்போதே மூட்டுவலி, சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஜோம்பி செல்கள் எப்படி உயிர்வாழ்கின்றன?

இந்த ஜோம்பி செல்களை அழிப்பது அவ்வளவு எளிதல்ல. புற்றுநோய் செல்கள் எப்படித் தங்களை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்கிறதோ, அதே தந்திரத்தை இந்த ஜோம்பி செல்களும் பயன்படுத்துகின்றன என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

கியோட்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹிரோஷி கோண்டோ (Hiroshi Kondoh) தலைமையிலான குழு, இந்தச் செல்களின் ரகசியத்தைக் கண்டுபிடித்துள்ளது. குளுக்கோஸ் சர்க்கரையை உடைத்து ஆற்றலைப் பெறும் 'கிளைகோலிசிஸ்' என்ற முறையை இந்தச் செல்கள் பயன்படுத்துகின்றன. இதில், PGAM மற்றும் Chk1 என்ற இரண்டு மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று கைகோத்துக்கொண்டு, இந்த ஜோம்பி செல்களை இயற்கையான மரணத்திலிருந்து காப்பாற்றுகின்றன.

Zombie Cells
Zombie Cells

விஞ்ஞானிகளின் அதிரடித் தாக்குதல்!

பிரச்னை எங்குள்ளது என்பதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அதற்கான தீர்வையும் உருவாக்கினர். PGAM மற்றும் Chk1 மூலக்கூறுகள் இரண்டும் கைகோப்பதைத் தடுக்கும் ஒரு புதிய வேதியியல் தடையை அவர்கள் உருவாக்கினார்கள்.

இந்தத் தடையை உடலில் செலுத்தியவுடன் மேஜிக் நடந்தது! அதுவரை சாகாமல் இருந்த ஜோம்பி செல்கள், தங்களைச் சுற்றியுள்ள நல்ல செல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் தானாகவே அழிந்துபோயின.

எதிர்காலப் பலன்கள் என்ன?

இந்தக் கண்டுபிடிப்பை எலிகளிடம் சோதனை செய்தபோது, அவற்றின் நுரையீரலில் இருந்த கடினமான தழும்புகள் (Lung fibrosis) குணமடைந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம், மனிதர்களின் முதுமையைத் தள்ளிப்போடவும், வயதாவதால் வரும் நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தவும் `செனோதெரபி' (Senotherapy) எனப்படும் புதிய மருத்துவ முறைக்கு இது மிகப் பெரிய வாசலைத் திறந்துள்ளது.

Zombie Cells
Zombie Cells

சுருக்கமாகச் சொன்னால், எதிர்காலத்தில் நாம் முதுமை அடைந்தாலும், நோய்களின்றி இளமைத் துடிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சாவியை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளனர்!

நோட்டுகளின் `மார்ஜின்' எலிகளுக்காக உருவாக்கப்பட்டதா? - இது தெரியாமப் போச்சே?! - 10

இதன் பின்னணியில் பல நூற்றாண்டுகால பாதுகாப்பு ரகசியம் ஒளிந்துள்ளது.margin பழங்காலத்தில் காகிதங்கள் மற்றும் புத்தகங்கள் மிகவும் விலையுயர்ந்தவை. ஆனால், அவற்றைச் சேமித்து வைப்பதில் பெரும் சவாலாக இருந்தது ... மேலும் பார்க்க

`S-ஆ P-ஆ… உங்கள் மெசேஜ் தலைப்பில் என்ன ரகசியம்?' - இது தெரியாமப் போச்சே?! - 9

ஒரு மெசேஜின் மதிப்பை தீர்மானிப்பது, அதன் உள்ளடக்கம் அல்ல. அதன் கடைசி எழுத்து. சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். ஒரு இளைஞருக்கு, வங்கியில் இருந்து OTP வந்தது. வேலை பிஸியால், பிறகு பார... மேலும் பார்க்க

“நான் இவ்வளவு உழைக்கிறேன்; ஆனா அங்கீகாரம்.?” – ஊழியரின் மனக்குரலுக்கு தீர்வு? | `பேசும் மனசு' 4

கரியர், குடும்பம், உறவுகள் – வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல கேள்விகளும் சிக்கல்களும் நம்மைச் சுற்றி வரும். சில நேரங்களில் அந்தப் பிரச்னைகளை யாரிடமும் பகிர முடியாமல் மனதுக்குள் வைத்துக்கொண்டு வாழ... மேலும் பார்க்க

Locker Loop: சட்டையின் பின்னே இருக்கும் ‘லாக்கர் லூப்’ எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 8

உங்கள் ஃபார்மல் சட்டைகளின் பின்பக்கம், காலருக்கு கீழே ஒரு சிறிய துணி வளையத்தைப் பார்த்திருப்பீர்கள். 'லாக்கர் லூப்' (Locker Loop) என்று அழைக்கப்படும் இதற்குப் பின்னால் ஒரு காதல் கதையே இருக்கிறது!Locke... மேலும் பார்க்க

Whatsapp-ல் நமக்கு நாமே மெசேஜ் செய்யலாம்! - இது தெரியாமப் போச்சே?! - 7

வாட்ஸ்அப் செயலியில், நமக்கே நாம் மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் ‘Message Yourself’ வசதி இருப்பது தெரியுமா? மளிகை சாமான்கள், மருந்துகள், அல்லது வேறு ஏதேனும் முக்கியக் குறிப்புகள் போன்றவற்றை அவரவர் துணைவரின்... மேலும் பார்க்க

பாத்திரங்களின் கைப்பிடியில் ஓட்டை எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 6

Fuel Tank: காரின் எரிபொருள் நிரப்பும் பகுதி எந்தப் பக்கம்? - இது தெரியாமப் போச்சே?! - 5சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பாத்திரங்களின் (Pans) கைப்பிடி நுனியில் ஒரு சிறிய துளை இருப்பதை பார்த... மேலும் பார்க்க