செய்திகள் :

கெஜ்ரிவால் வழக்கு: `நீதிபதியின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாதா?' - பெண் நீதிபதி காட்டம்

post image

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு பெண் நீதிபதி ஸ்வர்னா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் இவ்வழக்கில் இருந்து நீதிபதி ஸ்வர்னா விலக வேண்டும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், `நீதிபதியின் மகன்கள் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் உதவியோடு பணிகள் பெற்றுள்ளனர்' என்றும், `நீதிபதி ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதாவும்' குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு நீதிபதி ஸ்வர்னா முன்பு விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி, `தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது விசாரணையில் உள்ள வழக்குக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், தனது குடும்ப உறவினர்கள் எவரும் தனது நீதிமன்றத்தின் முன் ஆஜராகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் “ஒரு அரசியல்வாதியின் மனைவி அரசியல்வாதியாக முடியுமென்றால், ஒரு அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசியல்வாதிகளாக முடியுமென்றால், ஒரு நீதிபதியின் பிள்ளைகள் சட்டத் துறையில் நுழைய முடியாது என்று எப்படிக் கூற முடியும்? இது நீதிபதிகள் குடும்பத்தின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்குச் சமமாகும்.

ஒரு நீதிபதியின் குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்கிறார்கள் என்பதை, வழக்குத் தொடுப்பவர் எவரும் கேள்விக்குள்ளாக்க முடியாது. ஒரு நீதிபதியின் பிள்ளைகளோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ தங்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று, வழக்குத் தொடுப்பவர் எவரும் கட்டளையிட முடியாது. நான் அரசியலமைப்பு சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துள்ளேன். . நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து நீதி வளைந்து கொடுப்பதில்லை என்பதை எனது உறுதிமொழி எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது.

எந்தவொரு அரசியல் நிர்ப்பந்தத்திற்கும் நீதி ஒருபோதும் அடிபணிவதில்லை. எவ்விதப் பாரபட்சமுமின்றி, அச்சமின்றி நான் முடிவெடுப்பேன். வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிப்பேன். இந்த வழக்கிலிருந்து நான் விலகமாட்டேன். ஒரு நீதிபதி நடுநிலைமையுடன் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது; நீதிபதி ஒருவர் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலக வேண்டும் என்று கோரும் வழக்குத் தரப்பினர், அந்த நீதிபதி நடுநிலைமை தவறுவதை நிரூபிக்க வேண்டும்.

வழக்கு தொடுப்பவர் நீதித்துறையையே விசாரணை முன்பு நிறுத்தியுள்ளார். இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான பாதையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்'' என்று குறிப்பிட்டார்.

நீதிபதி ஸ்வர்னா ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததை கெஜ்ரிவால் சுட்டிக்காட்டி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி ஸ்வர்னா, “அந்த நிகழ்ச்சிகள் புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் மகளிர் தின நிகழ்வுகள் குறித்த நிகழ்ச்சிகளாகவோ, அல்லது இளம் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுவதற்கான நிகழ்வுகளாகவோ இருந்தன. பல நீதிபதிகள் அந்நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இத்தகைய பங்கேற்பை, ஏதேனும் ஒரு சித்தாந்தச் சார்பாக குறிப்பிட இயலாது.

இவ்வழக்கில் இருந்து நான் விலக வேண்டும் என்ற இந்த மனுவானது ஒரு "Catch-22" (சிக்கலான இருதலைக்கொள்ளி) சூழலை உருவாக்கி இருக்கிறது. இவ்வழக்கில், நான் விலகினாலும் சரி அல்லது விலகாவிட்டாலும் சரி எந்நிலையிலும் கேள்விகள் எழும் வகையிலான ஒரு சூழலில் நான் நிறுத்தப்பட்டுள்ளேன். மனுதாரர் (கேஜ்ரிவால்) தனக்குச் சாதகமான, 'எப்படிப் பார்த்தாலும் தனக்கே வெற்றி' எனும் ஒரு சூழலை உருவாக்கிக்கொள்வார்.

இவ்வழக்கிலிருந்து நான் விலகிக்கொண்டால், எவ்வித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு அது முக்கியத்துவம் அளிப்பதாக அமையும். விசாரணையிலிருந்து விலகிக்கொள்ளும் அந்த எளிதான பாதையானது, அமைதியாக இதிலிருந்து வெளியேறுவதாகும். அதேவேளையில், ஊடகங்கள் பொறுப்புணர்வு ஏதுமின்றி அவதூறு பரப்பும்" அவர் கவலை தெரிவித்தார்.

மாதவிடாய் விடுமுறை: ``உடனடியாகவும், கட்டாயமாகவும் அமல்படுத்துக!" - கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

கர்நாடகாவில் உள்ள அனைத்து பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் 'மாதவிடாய் விடுமுறை' (Menstrual Leave) வழங்கும் கொள்கையைத் தடையின்றி அமல்படுத்த வேண்டும் என்று ம... மேலும் பார்க்க

ரூ.5 கோடி ஜீவனாம்சம்; 80 வழக்குகள்; மனைவியின் 10 ஆண்டு போராட்டம் - பிரிவு 142-ஐ பயன்படுத்திய கோர்ட்!

பத்து ஆண்டுகளாக நீடித்த ஒரு திருமணப் பிரச்னைக்கு, ‘மகாபாரதப் போர்’ என வர்ணித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.பிரிந்து வாழ்ந்த தம்பதிக்கு விவாகரத்து... மேலும் பார்க்க

`மூடநம்பிக்கையைத் தடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லையா?' - உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிராகவும், அது தொடர்பாக எழுந்துள்ள அர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் வழக்கு: ”பிற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?”- ஹென்றி திபேன் கேள்வி

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23-ந்தேதி, மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் கட... மேலும் பார்க்க

’ஆயுள் தண்டனை தானே விதிக்கும் என ஏளனமாக நினைப்பார்கள்’- சாத்தான்குளம் வழக்கில் நீதிபதி பேசியது என்ன?

கடந்த 2020 ஜூன் 19 ல் சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ்ஸை காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்று தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்... மேலும் பார்க்க

`கணவர் இறந்த பிறகு, மாமனாரிடமிருந்து பெண் ஜீவனாம்சம் பெறலாம்'- அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டால், கணவன் தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஜீவனாம்சம் கொடுக்கும் கணவன் இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வருமானம் இல்லா... மேலும் பார்க்க