செய்திகள் :

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.

இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது மும்பை அணி.

GT vs MI
GT vs MI

இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு இளம் வீரரான அஸ்வனி குமார் முக்கியப் பங்காற்றி இருக்கிறார்.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய அஸ்வனி குமார், "எங்கள் அணி தோற்றுக்கொண்டிருந்த போதிலும், நாங்கள் பாஸிட்டிவாகத்தான் இருந்தோம்.

சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் என்னை போன்ற இளம் வீரர்களுக்கு ஆதரவளித்தனர். ஒருபோதும் எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கவில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் எப்போதும் ஒரு குடும்பத்தில் இருப்பது மாதிரியான சூழல்தான் இருக்கும்.

நீங்கள் சிறப்பாகச் செயல்படாதபோது கூட, அவர்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தைக் கொடுப்பார்கள்" என்றிருக்கிறார்.

தொடர்ந்து நேற்றைய போட்டியில் ஆடியது குறித்து பேசிய அவர், "நான் ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன். ஆடுகளம் என்ன கேட்டதோ அல்லது அந்தச் சூழலுக்கு எது தேவையோ, அதற்கேற்ப நான் பந்து வீசினேன். தவிர எங்களிடம் மிகவும் வலுவான திட்டமிடலும் இருந்தது.

அஸ்வனி குமார்
அஸ்வனி குமார்

விக்கெட்டுகளைச் சரியாக எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஹர்திக் பாயுடன் ஆலோசித்த பிறகு, அதைச் சரியாகச் செயல்படுத்தினோம்.

எனக்கு எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன். (நேற்றைய ஆட்டத்தில்) அது நடந்திருக்கிறது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று பேசியிருக்கிறார்.

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு மு... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க

CSK: சென்னை அணிக்குப் பின்னடைவு? - ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் யாரை களமிறக்கப் போகிறது சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. இதுவரை ஆறு போட்டிகளி... மேலும் பார்க்க

Dhoni: தோனி எப்போது களமிறங்குவார்? - சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பய... மேலும் பார்க்க

PBKS Vs LSG: 'எல்லாரும் அவங்க ஸ்டைல்ல ஆடுறாங்க, அதுதான் எங்களுக்குத் தேவை'– ஸ்ரேயஸ் ஐயர்

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 19)ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைதக்க... மேலும் பார்க்க

'எப்படி வீரர்களை அலட்சியமாகக் கையாள முடிகிறது'; காயத்துடன் ஆயுஷ் - CSK நிர்வாகத்தை சாடிய அஷ்வின்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முழங்காலில் கட்டுடன் களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவை காயத்துடனே பேட்டிங், ரன் ஓட வைத்த சிஎஸ்கே நிர்வாகத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் கடுமையாக சாடியிருக்கிறார். ஹை... மேலும் பார்க்க