செய்திகள் :

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை அணி.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, " அகமதாபாத் மைதானம் எப்போதும் மும்பை அணிக்குச் சவாலான ஒன்று.

ஆனால், இன்று ஒட்டுமொத்த அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

GT vs MI
GT vs MI

இந்த வெற்றி அணிக்கு மிகவும் அவசியமானது, அதிலும் வெளியூரில் வைத்துப் வெற்றி பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி.

14-வது ஓவர் டைம்-அவுட்டின் போது, திலக் வர்மாவிடம் 'எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்தைப் பார்த்து அடி' என்று மட்டுமே கூறினேன்.

அவரிடம் இருக்கும் அசாத்திய பேட்டிங் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால் அந்த வேகம் அணிக்குத் தேவைப்பட்டது.

பும்ரா ஏன் முதல் ஓவர் வீசுவதில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். அவரது ஐபிஎல் வரலாற்றிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே அவர் முதல் ஓவர் வீசியுள்ளார்.

இன்று புதிய பந்தில் விக்கெட் எடுக்க வேண்டும் என முடிவெடுத்தோம், அதற்கு பும்ராவை விடச் சிறந்த தேர்வு யாரும் இல்லை.

GT vs MI
GT vs MI

அறிமுக வீரர் கிரிஷ் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அஸ்வனி குமார் என இளம் வீரர்களின் பங்களிப்பு அபாரமானது.

ஃபீல்டிங்கில் நமன் கொடுத்த ஒத்துழைப்பும் மிக முக்கியம். இந்த வெற்றி கண்டிப்பாக இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸின் தலையெழுத்தையே மாற்றும்!" என நம்பிக்கையுடன் பேசியிருந்தார் ஹர்திக்.

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க

CSK: சென்னை அணிக்குப் பின்னடைவு? - ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் யாரை களமிறக்கப் போகிறது சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. இதுவரை ஆறு போட்டிகளி... மேலும் பார்க்க

Dhoni: தோனி எப்போது களமிறங்குவார்? - சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பய... மேலும் பார்க்க

PBKS Vs LSG: 'எல்லாரும் அவங்க ஸ்டைல்ல ஆடுறாங்க, அதுதான் எங்களுக்குத் தேவை'– ஸ்ரேயஸ் ஐயர்

ஐபிஎல் 2026-ன்நேற்றைய (ஏப்ரல் 19)ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைதக்க... மேலும் பார்க்க

'எப்படி வீரர்களை அலட்சியமாகக் கையாள முடிகிறது'; காயத்துடன் ஆயுஷ் - CSK நிர்வாகத்தை சாடிய அஷ்வின்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முழங்காலில் கட்டுடன் களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவை காயத்துடனே பேட்டிங், ரன் ஓட வைத்த சிஎஸ்கே நிர்வாகத்தை ரவிச்சந்திரன் அஷ்வின் கடுமையாக சாடியிருக்கிறார். ஹை... மேலும் பார்க்க