GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்ற...
காதலை கைவிட மறுப்பு: 16 வயது மகளை கொலை செய்து முகத்தில் ஆசிட் ஊற்றி அடையாளம் தெரியாமல் செய்த தந்தை
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் விஜய் செளபே. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். 10வது வகுப்பு படித்து வரும் அந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இது விஜய்-க்கு தெரிய வந்தது. எனவே காதலை கைவிடும்படி அவரது தந்தை விஜய் கேட்டுக்கொண்டார். ஆனால் அப்பெண் தனது காதலில் பிடிவாதமாக இருந்தார்.
இதனால் விஜய் தனது நண்பர் அப்துல் மன்னன் என்பவரின் துணையோடு வாடகை கார் ஒன்றை ஏற்பாடு செய்து தனது மகளை அதில் அழைத்து சென்றார். அவர்கள் சடங்கு செய்யவேண்டும் என்று கூறி சுல்தான்பூர் என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பகல் முழுவதும் சுற்றிவிட்டு இரவு ஆனதும், நள்ளிரவு 1 மணிக்கு காரில் உறங்கிக்கொண்டிருந்த மகளை விஜய் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
அதன் பிறகு கையோடு எடுத்து சென்று இருந்த ஆசிட்டை அப்பெண் முகத்தில் ஊற்றி அடையாளம் தெரியாதபடி செய்தனர். உடலை அங்குள்ள கால்வாய் ஒன்றில் போட்டுவிட்டு வந்துவிட்டனர்.

வந்த பிறகு இரண்டு நாள் கழித்து தனது மகளை காணவில்லை என்று கூறி விஜய் ஆன்லைன் மூலம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பெண்ணின் அடையாளம் தெரியாத உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் அங்கிருந்த போன் விபரங்களை ஆய்வு செய்தபோது விஜய் சம்பவ இடத்தில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரையடுத்து அவரது நண்பரையும் போலீஸார் கைது செய்தனர்.





















