செய்திகள் :

பெண் காணாமல்போன வழக்கு; அலட்சியம் காட்டிய 28 போலீஸார் சஸ்பெண்ட்; கோர்ட் தலையிட்டு அதிரடி

post image

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிண்டஜோரா இடத்தை சேர்ந்த புஷ்பா (18) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரின் தாயார் ரேகா தேவி போலீஸில் புகார் செய்திருந்தார். ஆனால் 9 மாதம் ஆகிவிட்ட நிலையில் போலீஸார் புஷ்பாவைக் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து ரேகா தேவி தன் மகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்தபோது போலீஸார் இவ்விவகாரத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டது குறித்து நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். அதோடு டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி மாவட்ட டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். கோர்ட் தலையிட்டதைத் தொடர்ந்து பெண் காணாமல்போன விவகாரத்தில் ஒரே நாளில் போலீஸார் துப்பு துலக்கினர்.

இவ்வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணையில் காணாமல் போன பெண் புஷ்பா கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு கொலை செய்த நபரும் கைது செய்யப்பட்டார்.

அதோடு இவ்வழக்கை சரியாக விசாரிக்காமல் குற்றவாளிக்கு சாதகமாக நடந்து கொண்டதாக போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 28 போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து சிறப்பு விசாரணைக்குழு அதிகாரி கூறுகையில்,'' இவ்வழக்கில், விசாரணை அதிகாரிகள் குற்றவாளிக்கு சாதகமாக நடந்து கொண்டுள்ளனர். இவ்வழக்கை பலவீனப்படுத்த குற்றவாளியிடமிருந்து பணம் வாங்கியதோடு மட்டுமல்லாது குற்றவாளியுடன் சேர்ந்து போலீஸ் அதிகாரிகள் பார்ட்டியும் நடத்தியுள்ளனர்.

வழக்கின் ரகசியத்தன்மையில் சமரசம் செய்யப்பட்டது. காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரணங்களுக்காகவே அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று எஸ்பி கூறினார். சிறப்பு விசாரணைக்குழு தொழில்நுட்ப மற்றும் ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்தது. மொபைல் அழைப்பு விவரப் பதிவுகள் (சிடிஆர்) மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், புஷ்பா மஹ்தோ, தினேஷ் குமார் மஹ்தோவுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில், விசாரணைக் குழு, தினேஷைக் காவலில் எடுத்து, அவரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியது.

இதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர், அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதாகவும் தெரிவித்தார். கடந்த ஜூலை 21ம் தேதியன்று புஷ்பா கல்லூரியில் சேர்வதற்காகச் சென்றுள்ளார். அங்கு திட்டமிட்டபடி தினேஷும் அங்கு சென்றான். அங்கிருந்து இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது புஷ்பாவை கத்தியால் குத்திக் கொலைசெய்து புதைத்துள்ளது தெரிய வந்தது.

கும்பமேளா வைரல் பெண்ணைத் திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு; கேரள சிபிஎம் நிர்வாகிகளிடம் விசாரணை?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். கும்... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை; நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரிய... மேலும் பார்க்க

திருவள்ளூர்: திருமண ஏற்பாடு; நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மகள் சிரிஷா (19). இவர் திருப்பதியில் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு படிப்பை பாத... மேலும் பார்க்க

மும்பை: தமிழ் மூதாட்டியிடம் டிஜிட்டல் மோசடி; ரூ.33 லட்சம் பறித்த குஜராத் கிரிக்கெட் வீரர் கைது

மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. வங்கிகளில் அதிக பணம் இருப்பவர்களைக் குறி... மேலும் பார்க்க

சென்னை: தலைவலி சிகிச்சைக்குச் சென்ற பெண் மரணம் - முற்றுகையிடப்பட்ட மருத்துவமனை!

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவரின் மனைவி பவானி. இவருக்கு திடீரென தலைவலி ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவானியை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு... மேலும் பார்க்க

சென்னை: ரத்த வெள்ளத்தில் வீட்டுக்கு வந்த இளைஞர் - அதிர்ச்சியடைந்த குடும்பம்!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (28). இவர் மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நரேஷ்குமார், மது அருந்தி விட்... மேலும் பார்க்க