GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்ற...
தரையிறங்க முடியாமல் 4 மணி நேரம் வானில் பறந்த விமானம்; அச்சத்தில் அழுத பயணிகள்; என்ன நடந்தது?
ஹைதராபாத்தில் இருந்து ஹூப்ளிக்கு Fly91 Flight என்றதனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் சென்று கொண்டிருந்தபோது ஹூப்ளி அருகில் சென்ற போது திடீரென விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானம் தரையிறங்க முடியவில்லை. நிலைமையை சரி செய்யவும், பாதுகாப்பான முறையில் தரையிறங்க பைலட் முயற்சி மேற்கொண்டார். இதனால் விமானம் முண்டகோட், தாவணகெரே மற்றும் சிவமொகா உள்ளிட்ட பகுதிகளின் மேல் வட்டமிட்டவாறு, ஏறக்குறைய நான்கு மணி நேரம் வானிலேயே பறந்துகொண்டிருந்தது.
விமானத்தைத் தரையிறக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்காததால் விமானம் பெங்களூரு நோக்கி திருப்பி விடப்பட்டது. விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிந்தவுடன் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

அனைவரும் கதறி அழ ஆரம்பித்தனர். சில பயணிகள் கடவுளே எப்படியாவது எங்களைக் காப்பாற்று என்று கூறி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்.
ஒரு பெண் பயணி அழுது கொண்டே கடவுளிடம் பிரார்த்தனை செய்த வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாக பரவியது.
எப்போது என்ன நடக்குமோ என்ற பரபரப்பு விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளிடமும் இருந்தது. விமானத்தின் குலுங்கல் தீவிரமடைந்தபோது, பெண் பயணி தன் முகத்தில் கண்ணீர் வழிந்தோட, கட்டுப்படுத்த முடியாமல் விம்மி அழத் தொடங்கினார்.
கடவுளே காப்பாற்று என்ற வார்த்தை விமானத்தில் அடிக்கடி கேட்டபடி இருந்தது. நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் மறுஜென்மம் எடுத்தது போன்ற ஒரு நிம்மதியுடன் விமானத்தில் இருந்து வெளியில் இறங்கி வந்தனர்.
அவர்கள் விமானத்தில் இருந்து தப்பித்தது கடவுள் புண்ணியம்தான் என்று தெரிவித்தனர்.





















