இந்தியாவில் 'இந்த' 15 வங்கிகள் மட்டும் தங்கம் இறக்குமதி செஞ்சுக்கலாம் - மத்திய அ...
விராட் கோலி போட்ட லைக்; இணையத்தில் வைரலாகும் LizLaz - யார் இவர்?
இன்ஸ்டாகிராமில் தென்னாப்பிரிக்கா இன்ப்ளூயன்சர் ஒருவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தென்னாப்பிரிக்கா இன்ஃப்ளூயன்சர் LizLaz என்பவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யார் இந்த LizLaz என்று இணையத்தில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
விராட் கோலி லைக் போட்டிருக்கும் LizLaz என்பவரின் இயற்பெயர் ஜெனிஃபர். தென்னாப்பிரிக்கா நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது ஜெர்மனியில் வசித்துவருகிறார்.
பாடகரான இவர் டிராவல் பிளாகராகவும் இருக்கிறார். ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் டச்சு ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர். உளவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார்.

பெங்களூரு, மும்பை, டெல்லி பகுதிகளில் உள்ளூர் மக்களுடன் இவர் பேசிய வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். சமோசா, சமோசா என பேசி இவர் பதிவிட்டிருக்கும் வீடியோவும் பெங்களூருவில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் குறித்து அவர் போட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
















