செய்திகள் :

"பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்.!"- மோடியின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி

post image

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதம் மக்களவையில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

விவாதங்களுக்கு பிறகு இன்று (ஏப்ரல்.17) மாலை வாக்கெடுப்பு நடைபெறும். அவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்பதால் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

திமுக எம்.பி கனிமொழி
திமுக எம்.பி கனிமொழி

இதனிடையே நேற்று தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு திமுகவினர் கருப்பு உடை அணிந்து சென்றிருந்தனர்.

அதனை பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது திமுக எம்.பி கனிமொழி இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

" ஹிந்துத்துவாவை பாதுகாப்பதாக சொல்லும் ஆளும் கட்சியினருக்கு கருப்பு தெய்வமான காளி நினைவில் இல்லை போல. பெண் சக்தியை பறைசாற்றும் பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்திருக்கிறார். அந்த காளிதான் ஒருவரின் ஈகோ அராஜகம் போன்றவற்றை விரட்டும் தன்மை கொண்டவர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அத்தகைய கருப்பு வண்ணத்தை நாங்கள் அணிந்து எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம். ஏனென்றால் அது பெரியாரின் நிறம். சுயமரியாதை, கடைசிவரை போராடும் குணத்தை கற்றுக்கொடுத்தவர் பெரியார். நாங்கள் கடைசிவரை போராடுவோம்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

`ஹோலோகிராம் டு ரோபோட்' - ஹைடெக் பிரசாரத்தில் கலக்கும் தவெக-வினர்!

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்குமார் நேற்று (20.04.2026) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ரோபோட்டுடன் இணைந்து வீதியோரங்களில் நடைபயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். ரோபோட்டின் கழுத்தில் கட்சிக... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: 'எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை.!'- காரப்பொரி வாங்கி சாப்பிட்ட மோடியை விமர்சித்த மம்தா

294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 29 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கோயில் திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க

Iran: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" - ஈரான் என்ன சொல்கிறது?

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது. இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரி... மேலும் பார்க்க