செய்திகள் :

Hansika Motwani: "தவறான ரயிலில் பயணிக்க முடியுமா?" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா

post image

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா-சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் மும்பை பந்தாரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 11-ம் தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா மோத்வானி

அதைத் தொடர்ந்து இருவர் தரப்பிலும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், சமீபத்தி ஹன்சிகா தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.

அதில், ``மக்கள் எப்போதும் பரபரப்பான செய்திகளை எதிர்பார்ப்பார்கள். அதுபோன்றதொரு செய்தி என் மூலம் அவர்களுக்கு தலைப்புச் செய்தியளவு கிடைத்தது. அதற்கு பிறகு, அது குறித்து நான் என்ன கருத்துக் கூறுகிறேன் என எதிர்பார்ப்பார்கள்.

எனது திருமண வாழ்வில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து நான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இனிமேலும் அதைப்பற்றிப் பேசப்போவதில்லை. ஏனெனில் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல.

எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தவறான ரயிலில் ஏறிவிட்ட பிறகு, அதில் பயணித்துத் துன்பப்படுவதை விட, அந்த ரயிலிலிருந்து இறங்கிவிடுவதுதான் சிறந்தது. நான் இயல்பாகவே மிகவும் மகிழ்ச்சியான, கலகலப்பான சுபாவம் கொண்டவள்.

அப்படிப்பட்ட நான் மிகவும் இருண்ட மனநிலையில் இருந்ததை என் அம்மாவும், சகோதரனும் நேரில் பார்த்திருக்கிறார்கள். `இதில் உனக்கு மனநிறைவு அல்லது சௌகரியம் இல்லை என்றால், அதில் தொடர்ந்து பயணிக்க வேண்டாம்' என எனக்கு உறுதுணையாக நின்றார்கள். எனவே, 'நீ என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நாங்கள் துணை நிற்போம்' என்று கூறினார்கள்.

ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா மோத்வானி

உண்மையாகச் சொல்லப்போனால், இன்றுவரை, எங்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதுவே மிகச் சிறந்தது என நினைக்கிறேன். இரண்டு நபர்களுக்கு இடையில் நடக்கும் விஷயங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று நான் எப்போதும் கூறுவதுண்டு.

அதைப் பற்றி வேறொருவர் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. எனது குடும்பத்தாரிடமிருந்து எனக்கு அளவற்ற ஆதரவு கிடைக்கிறது. எனக்கு எந்தவிதமான வருத்தங்களும் இல்லை. நான் இப்போது இருக்கும் நிலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"அதுக்கு வாய்ப்பு அமையல; பிக்பாஸ் ஹெல்ப் பண்ணியிருக்கு!" - ஹீரோவாகும் விக்கல்ஸ் விக்ரம் | பேட்டி

ஸ்டாண்ட்-அப் காமெடியனாகத் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் 'விக்கல்ஸ்' விக்ரம். யூடியூபிலும் இவர் பதிவிடும் காணொளிகளும் பலருக்கும் ஃபேவரைட். கடந்த பிக் பாஸ் சீசனில் இவர் கலந்துகொண்டு ஃபைனல் வரை வந்திர... மேலும் பார்க்க

'''Joe' படத்துல பண்ணின தவறுகளை இதுல திருத்திக்கணும்!" - ஜி.வி உடன் இணையும் 'ஜோ' பட இயக்குநர் பேட்டி

ரியோ ராஜின் 'ஜோ' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஹரிஹரன் ராம். 2023-ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் பல அறிமுக இயக்குநர்களுக்கு வெளிச்சம் கிடைத்திருந்தது. அவர்களில் ஒருவர் ஹரிஹரன் ராம். 'ஜோ' படம் ... மேலும் பார்க்க

"கதையில் சில மாற்றங்கள் சொன்னேன்; நான் சொல்லி அனுப்பிய.."- லப்பர் பந்து குறித்து எஸ்.ஜே சூர்யா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (lik). இத்திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகி... மேலும் பார்க்க

LIK: " இந்தப் படத்திற்கு அந்த பயம் இருந்தது; ஏன்னா..." - பிரதீப் ரங்கநாதன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இன்று இ... மேலும் பார்க்க

LIK: "என் மீது நம்பிக்கை இல்லாத சமயத்திலும் இதைச் செய்தேன்!" - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று... மேலும் பார்க்க

அலை கடல்: "இது கல்கிக்கு டிரிப்யூட்!" - பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே அலை கடல்18

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்து அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் ... மேலும் பார்க்க