”2 ஊற்று கிணறுகள், 300 பனை மரங்கள் அழிப்பு; யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள்!"- போ...
NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?
மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டியை ஓட்டவே மாட்டார்கள். எதிலும் உஷாராக இருப்பதுதான் இந்த வகை மனிதர்கள் பேசிக் சைக்காலஜி.
'ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி...' என்பது இன்னொரு வகை மனிதர்கள். இவர்கள் எதிலும் துணிந்து இறங்குவார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை, முடிவில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எந்தப் புதிய விஷயத்தையும் செய்து, ஒரு கை பார்த்துவிடுவோம் என்று நினைப்பது இந்த வகை மனிதர்களின் சைக்காலஜி.
முதலீடு என்று வரும்போது இந்த இரு மனிதர்கள் எப்படி செயல்படுவார்கள்? ரிஸ்க்கே எடுக்க விரும்பாத மனிதர்கள் வங்கி பிக்சட் டெபாசிட், கார்ப்பரேட் பாண்டுகள், தங்கம், (ரியல் எஸ்டேட் என்பது ரிஸ்க்கான முதலீடுதான்) என பாரம்பரியமான முதலீடுகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள்.
இரண்டாவது வகை மனிதர்கள், பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யத் தயங்க மாட்டார்கள். இவை பலருக்கும் பரிச்சயம் இல்லாத புதிய முதலீடாக இருந்தாலும், துணிந்து இறங்கி நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்ப்பார்கள்.

இந்த இரண்டு வகை மனிதர்களில் முதல் வகை மனிதரான ரமேஷுக்கு 50 வயது. அடுத்த 10 ஆண்டுகளுக்குப்பின் தன் ஓய்வுக் காலத்துக்கு எடுத்து செலவு செய்யலாம் என்று நினைத்து 30 லட்சம் ரூபாயை வங்கி என்.ஆர்.ஐ எஃப்.டி.யில் முதலீடு செய்கிறார். இதற்கு 6.50% வட்டி கிடைக்கிறது.
இரண்டாவது வகை மனிதரான மகேஷ் 30 லட்சம் ரூபாயைப் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் 10 ஆண்டு காலத்தில் 12% லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து முதலீடு செய்கிறார்.
10 ஆண்டு முடிவில் இருவருக்கும் எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும்?
ரமேஷுக்கு 56,31,412 ரூபாய் திரும்பக் கிடைக்கும்.
மகேஷுக்கு 93,17,545 ரூபாய் திரும்பக் கிடைக்கும்.

60 வயதில் இருவரும் சேர்த்துவைத்த பணத்தில் இருந்து எவ்வளவு தொகையை திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்?
ரமேஷ் ஒரு மாதத்துக்கு 37 ஆயிரம் ரூபாயை மட்டுமே திரும்ப எடுக்க முடியும். அப்படி எடுத்தால், அடுத்த 25 ஆண்டுகளில் அவர் திரும்ப எடுத்த மொத்தப் பணம் 1.11 கோடியாக இருக்கும். அது போக, 1.18 லட்சம் ரூபாய் அவரிடம் இருக்கும்.
ஆனால், மகேஷோ ஒரு மாதத்துக்கு 90 ஆயிரம் ரூபாய் திரும்ப எடுக்க முடியும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மொத்தம் 2.70 கோடி ரூபாயை அவர் எடுத்த பின்பும், அவர் முதலீட்டுக் கணக்கில் 1.73 கோடி மிச்சமாக இருக்கும்!
அடேங்கப்பா! எவ்வளவு பெரிய வித்தியாசம் என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் 'செல்வத்தைப் பெருக்குவது எப்படி?' என்கிற கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பினால், பின்வரும் லிங்க்கை கிளிக் செய்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாமே...!
இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம் என்று தெரியுமா?
பாதுகாப்பு, பாதுகாப்பு என்று நினைத்து நாம் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும்போது நம்முடைய முதலீடு 8.25% என்கிற அளவுக்குத்தான் வட்டி வருமானம்கிடைக்கும். வங்கி எஃப்.டி.யில் நம் பணம் பத்திரமாக இருந்தாலும் அது ஆண்டுதோறும் 6.50% லாபம் என்கிற அளவில்தான் வளர்கிறது.
ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் குறுகிய காலத்தில் முதலீடு செய்த பணம் கொஞ்சம் குறைந்தாலும், காலம் செல்லச் செல்ல நஷ்டத்தில் இருந்து மீண்டு, லாபம் தரத் தொடங்கி, 10 ஆண்டு காலத்தில் ஆண்டுதோறும் 12% என்கிற அளவுக்கு லாபம் தருகிறது.
இந்த 12% லாபத்துக்கு என்ன உத்தரவாதம் என்று கேட்பவர்கள், பங்குச் சந்தை சார்ந்த பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை சதவிகிதம் லாபம் தந்திருக்கிறது என்று தாராளமாகப் பார்க்கலாம். பங்குச் சந்தை சார்ந்த மிக மிகச் சில ஃபண்ட் திட்டங்களே 10% என்கிற அளவில் லாபம் தந்துள்ளன. பெரும்பாலான ஃபண்டு திட்டங்கள் 12% என்பதற்கு மேல் லாபம் தந்துள்ளன. இன்னும் சில திட்டங்கள் 15% முதல் 18% வரை கூட ஆண்டுதோறும் லாபம் தந்துள்ளன. இப்படிக் கூட்டு வட்டி (power of compounding) முறையில் லாபம் கிடைக்கும் போதுதான் நம் முதலீட்டுப் பணம் பல்கிப் பெருகுகிறது.
ஆக, பாதுகாப்பானது என்று நினைத்து நம் பணத்தை சிம்பிள் வட்டி தரும் திட்டத்தில் வைப்பதைவிட, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் வைத்திருந்தால், நம் பணத்தைப் பல மடங்கு பெருக்கவும் முடியும்! ஓய்வுக் காலத்தில் அந்தப் பணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, ஒரு குறையும் இல்லாமல் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்!
உங்களுக்கு நிதிச் சுதந்திரம் வேண்டுமா? நிதிச் சுதந்திரம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் வீடியோவை நீங்களும் பார்த்து பயன் பெற வேண்டுமா? இதோ இந்த லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்து, வீடியோவைப் பாருங்கள்...
லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!
Labham Youtube Video: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil















