செய்திகள் :

Retirement: 2026-ல் ரிட்டைர்மென்ட் வாழ்க்கையை 'ராஜாங்கம்' ஆக்கும் 3 ரகசியங்கள்!

post image

'முப்பது வருட உழைப்பு... குழந்தைகளைப் படிக்க வைத்து, லோனைக் கட்டி முடித்து 60 வயதில் ஓய்வு பெறும்போது நிம்மதியாக மூச்சு விடலாம்!' இதுதான் 45-50+ வயதுகளில் இருப்பவர்களின் எண்ணமாக இருக்கும்.

இந்த வயதில் கையில் பி.எஃப் (PF), கிராஜுவிட்டி என ஒரு நல்ல 'லம்ப்சம்' (Lumpsum) தொகையும் இருக்கும். "இனி எந்தக் கவலையும் இல்லை, ஆபீஸ் டென்ஷன் இல்லை" என்ற கனவு எவ்வளவு அழகானது!

உங்கள் நண்பனாகவும் நிதி ஆலோசகராகவும் சொல்கிறேன், இந்த உழைப்பு உங்களுக்குப் பாதுகாப்பான அரணாக மாற வேண்டும். ஆனால் நிஜம் அவ்வளவு இனிமையானதா? இந்தியாவில் இன்று பல முதியவர்கள் கையில் பல லட்சங்கள் இருந்தும், சரியான மாதாந்திர வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

Old age - ஓய்வுக்காலம் | Retirement
Old age - ஓய்வுக்காலம் | Retirement

உலகப் பொருளாதார அமைப்பான (WEF) வெளியிட்ட அதிர்ச்சிகரமான ஆய்வின்படி, இந்தியர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதால், 60 வயதில் ஓய்வுபெறும் பெரும்பாலானோரின் சேமிப்புப் பணம், அவர்கள் இறப்பதற்கு 10 வருடங்களுக்கு முன்பே முழுமையாகத் தீர்ந்துவிடுகிறது!

இதற்குக் காரணம் என்ன? உங்களிடம் உள்ள பல லட்சம் லம்ப்சம் தொகையை அப்படியே பேங்க் FD-யிலோ அல்லது தபால் நிலையத்திலோ போட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்குவதுதான். இன்று பேங்க் FD வட்டி சுமார் 6.5%. ஆனால் மருத்துவப் பணவீக்கம் (Medical Inflation) வருடத்திற்கு 14% வளர்கிறது. அன்றாடச் செலவுகளின் பணவீக்கம் 7%.

உங்களின் 1 கோடி ரூபாயை பேங்கில் வைத்தால் வட்டியாக மாதம் 50,000 ரூபாய் கிடைக்கலாம். ஆனால் இன்னும் 10 வருடத்தில் அதே வாழ்க்கையை வாழ உங்களுக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் தேவைப்படுமே? அப்போது யாரிடம் போய் நிற்பீர்கள்? வட்டி போதாமல், அசலையும் சிறிது சிறிதாக அரித்துச் சாப்பிட்டால், கடைசி காலத்தில் பிள்ளைகளிடம் கையேந்தும் நிலை வருமே என நினைத்தால் பயமாக இருக்கிறது இல்லையா?

retirement | tension | | pension
retirement | tension | | pension

இந்த அச்சத்தை உடைத்தெறிந்து, லம்ப்சம் தொகையை வாழ்நாள் பென்ஷனாக (Monthly Pension) மாற்றுவதற்கு மியூச்சுவல் ஃபண்டில் உள்ள டாப் 3 வழிகள் இதோ:

வழி 1: SWP (Systematic Withdrawal Plan)

இது முதலீட்டின் மேஜிக்! உங்கள் பணத்தைப் பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து, தேவையான பென்ஷனை மட்டும் எடுப்பது. 1 கோடி ரூபாய் லம்ப்சம் தொகையை ஒரு கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்டில் (வருடத்துக்கு 10% வருமானம்) முதலீடு செய்து, வருடத்துக்கு 5% withdrawal என்றால், மாதம் சுமார் ₹41,700 பென்ஷனாக எடுக்கலாம்.

15 வருடங்கள் இப்படி எடுத்தாலும், மொத்தம் சுமார் ₹75 லட்சம் எடுத்திருப்பீர்கள். அதற்குப் பிறகும் உங்கள் அசல் கரையாமல், முதலீடு சுமார் ₹2.5 கோடி முதல் ₹2.7 கோடி வரை வளர்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. (1 கோடி ரூபாய் கணக்குக்கு மட்டுமே, நீங்கள் 10 லட்சம் கூட முதலீடு செய்யலாம்!)

வழி 2: பணவீக்கத்தை வெல்லும் அலோகேஷன்

மொத்தப் பணத்தையும் ஒரே இடத்தில் போடாமல், பாதுகாப்பிற்கு டெப்ட் (Debt) ஃபண்டுகளிலும், பணவீக்கத்தைத் தாண்டி வளர ஈக்விட்டி (Equity) ஃபண்டுகளிலும் பிரிக்க வேண்டும். உங்களின் 50 லட்சத்தை FD-யில் 6.5% வட்டியில் வைத்தால் 10 வருடத்தில் 94 லட்சமாக மாறும். அதே 50 லட்சத்தை ஒரு 'பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில்' (11% வருமானம்) முதலீடு செய்தால், 10 வருடத்தில் அது சுமார் 1.4 கோடியாக வளரும்.

வழி 3: வரியை மிச்சப்படுத்துதல்

பேங்க் FD-யில் உங்களுக்கு வரும் முழு வட்டிக்கும் அதிகபட்சம் வரம்பாக 30% வரை வரி (Tax) கட்ட வேண்டும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் SWP முறையில், நீங்கள் எடுக்கும் லாபப் பகுதிக்கு மட்டுமே 12.5% நீண்ட கால மூலதன வரி கட்டினால் போதும்.

இந்த உத்திகளால் உங்கள் ஓய்வூதியத் தொகை ஒருபோதும் கரையாது. பணவீக்கத்தைத் தாண்டி, யாருடைய உதவியும் இல்லாமல் ராஜாங்க வாழ்க்கையை நீங்கள் கம்பீரமாக வாழலாம்! இதை உங்களின் சொந்த பணத்திற்கு, உங்கள் வயதுக்கு ஏற்ப பிராக்டிகலாகத் திட்டமிட ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ!

Labham Webinar April 19 2026

இனிமையான ஓய்வுக்காலம் - மாதாந்திர பென்ஷன் பெரும் டாப் 3 வழிகள்

*(50+ வயதினருக்கான லம்ப்சம் திட்டமிடல் ஒர்க் ஷாப் / மொத்த முதலீடு மூலம் விரும்பிய மாத பென்ஷன் பெரும் வழிகள்)*

நாள்: ஏப்ரல் 19, 2026, ஞாயிறு

நேரம்: காலை 11 மணி - இந்திய நேரம்

பேச்சாளர்: டீம் லாபம்

மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். 100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.

உங்கள் இனிமையான ஓய்வுக்காலத்தை உறுதி செய்ய இப்போதே லிங்க் க்ளிக் செய்து இப்போதே முன்பதிவு செய்யுங்கள் - https://labham.money/events/webinar-apr19-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_apr19_2026

'பெற்றொர்' அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க 'பிளான்'! | பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந... மேலும் பார்க்க

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க

NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?

மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டிய... மேலும் பார்க்க

`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்' புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க

கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத தவறுகளின் லிஸ்ட் | பணம் வளர்ப்போம் - 4

என்ன தான் பார்த்து பார்த்து நிதி திட்டமிடல் செய்தாலும், சில நேரங்களில் சில தவறுகளும் நடந்துவிடும். அவை தெரிந்து செய்யும் தவறுகள் அல்ல... தெரியாமல் செய்யும் தவறுகள் தான். அவை என்னென்ன என்பதை பட்டியலிடு... மேலும் பார்க்க

Labham - 2: தங்கம் விலை இந்த 10 ஆண்டில் எத்தனை மடங்கு உயரும்? #அக்‌ஷய திருதியை #Akshaya Tritiya

தங்கம் என்பது நம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நமக்கு மொத்தமாக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் வாங்கிக் குவிக்கிறார்கள் நம் மக்கள். இன்னும் சில நாள்களில் அக்ஷய திருதியை ப... மேலும் பார்க்க